‘பங்குத்தந்தை’ – குழப்பம் வேண்டாம். ஊரை அடிச்சிப் பங்குப் போட்டுக் கொள்வது, அவ்வளவுதான். ஆடு, மாடு திருடு போயிட்டால் ஊர் நாட்டில் சொல்வார்கள்… ‘எவனோ பங்கு போட்டுத் தின்னுட்டான் பாவி’ என்று. பாவம், மந்தைகளைக் காப்பாற்ற மீண்டும் ஒருமுறை மீட்பர் உயிர்த்தெழுவாரா?!
பங்குகளை பிரித்துக்கொள்வதில் சாதிகளைப் போலவே படிநிலைகள் உண்டு. அதாவது பெரிய பங்கு, சிறிய பங்கு, மீடியம் பங்கு என்று. திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரையில் இது ஒரு பெரிய மறை மாவட்டம். எழுபது, எண்பது பங்குகள் இருப்பதாக கிருத்துவ வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன. இருக்கட்டும், பரவாயில்லை. இதற்கெல்லாம் பாஸ் யார்ர்ர்…ரான்னா ‘சேசு சபை’ என்கிற ‘அந்தப்புற’ குருக்கள் சபைதான். அந்த அந்தப்புறத்திலொரு மகராஜன்தான் நம்மூரு சாமி யாரு? ராஜரத்தினம்.
இவரை Father என்றும் அழைப்பார்கள். ‘சாமியாரா? Father ? ரெண்டுல எதாவது ஒண்ணு சொல்லுங்க’ என்று கேட்காதீர்கள். ரெண்டுமே ஒண்ணுதான் பிரதர்…! அதாவது Father ரா குடித்தனம் பண்ணி, பிறகு சாமியாரா ஆனவங்க பலபேர். ஆனா சாமியாரே Father ஆகி புதுக்குடித்தனம் நடத்துறது இப்பவெல்லாம் ஃபேஷன்.
ஸ்தோத்திரம் ஆண்டவரே!
இதை பிளாரன்ஸ் மேரியிடம் கேட்டால்… ‘பாஸ்டேட்’ என்கிறார் ஆத்திரத்துடன். சரி அத்த விடுங்க சார்… பங்குக்கு வருவோம். ரொம்ப கொழப்பம் வேண்டாம்…. சிறிய பங்கு எம்.எல்.ஏ மாதிரி, பெரிய பங்கு எம்.பி மாதிரி. ஏதோ தன்னால முடிஞ்ச அளவு கர்த்தரிடம் மன்றாடிப் பங்குப் பெறுபவர் சிறிய பங்குத்தந்தை. முழங்கை வரையிலும் கையை விட்டு, கர்த்தரிடம் முழங்காலிட்டு அள்ளிக் கொள்பவர்தான் பெரிய பங்குத் தந்தை; அவ்வளவுதான் மேட்டர்.
அதாவது ஏசு அப்பத்தைப் பங்கிட்ட மாதிரி இப்படித்தான் சிறுசும், பெருசும் சுமார் ‘ச்சேர்’ பண்ணிக்கிறாங்க. பங்குன்னா… ஏதோ நம்மூர் திருவிழாவுல ஊருக்கே ரெண்டு கெடா வெட்டி, வீட்டுக்கு பிடி கறிய எடுத்துக்கிட்டுப்போற சாதாரண விவகாரமில்ல இந்தப் பங்கு. உண்டியல் காசு, கண்ணுக்கெட்டாத தூரம் நெல்வயல், நூறு, இருநூறு ஏக்கர்ல தென்னந்தோப்பு, வாழத்தோப்பு, மாந்தோப்பு, அதன்பிறகு வரி வசூலிக்க கல்யாணம், கருமாதி, ஞானஸ்ஞானம், ஈஸ்டர், கிருஸ்துமஸ், இதுபோதாம ‘புது நன்மை’னின்று புடுங்கிறதெல்லாம் பங்குத் தந்தையின் நன்மைக்கே.
இப்படியாக குவிகிறது தந்தையின் பங்கு. இந்தப் பங்குச் சந்தையில் மட்டும் புள்ளிகள் எப்பவும் ஏறுமுகத்திலேதான் இருக்கும். இதுல இன்னொன்னு என்னான்னா… மகாஜன சங்கம், தேவர் பேரவை மாதிரி ‘பங்குப்பேரவை’யின்னு ஒன்று உண்டு. அதாவது ஃபாதர் சங்கம், மதர் சங்கம், பிரதர் சங்கமெல்லாம் போதாதாம். மாதர் சங்கம், இளைஞர் சங்கம், பாலர் சங்கம், சிறுவர் மன்றம், சிறுவர் பாராளுமன்றம்… இப்படியாக பட்டியல் நீள்கிறது. கிருத்துவ வட்டாரங்களை தன் நிர்வாகத்தின் கீழ் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளவே இந்தச் சங்கங்கள். சொல்லப்போனால் வெள்ளைக்காரன் காலத்து ஏயத் வாரி, பகல் வாரி மாதிரிதான் இவைகள்.
இந்த கலைகளுக்கு ஒரே ஒரு கண்டிஷன். ஒரு கன்னத்தில் அடித்தால்… மறு கன்னத்தைக் காட்டாமல், எவனாவது ரோசப்பட்டு திருப்பி அடித்தவன் கன்னத்தில் அடித்தால், அவன் பேரவைகளில் அங்கம் வகிக்க முடியாது.
மேற்கண்ட நிர்வாக முறைகளைக் கட்டுக்கோப்பாக நடத்திச் செல்ல ஒரு தலைமை அலுவலகம் வேண்டுமல்லவா…? அதுதான் மாயத்தீவு தூய வளனார் கல்லூரி, திருச்சி – 02. அந்த சாம்ராஜ்ஜிய ராஜாதான் ஸாட்சாத் Father ராஜரத்தினம், நிற்க.
”தனக்கு சவக்குழியைத் தோண்ட தானே அதற்கு ஆட்களையும் தயார் செய்கிறது முதலாளித்துவம்” – என்று ஆசான் கார்ல் மார்க்ஸ் சொன்னது நினைவுக்கு வருகிறது. அது இந்த பாதிரிக்கு எப்படியோ கச்சிதமாக பொருந்துது பாருங்க…!
சில பல வருஷங்களாக கட்டாயப்படுத்தி ஒரு கன்னியாஸ்திரிய கெடுத்திருக்கிறாரு இந்த ராஜரத்தினம். பிளாரன்ஸ் மேரி கேட்காத போதே முன் வந்து பல பரிசு பொருட்களை காஸ்ட்லியாக வாங்கித் தந்திருக்காரு இந்த ராஜரத்தினம். ‘எதையோ வாங்கித் தந்து விட்டுப் போகட்டும் எழவ எடுக்க. அந்த செல்ஃபோன் எதுக்கு? நம்ம Father வாங்கித் தரணும்? இப்ப பாத்தீங்களா, குதிர குப்புற தள்ளினதுமில்லாம, குழியும் பறிக்குதில்ல’ என்று சக குருக்கள் கொழப்புறாங்க.
எங்க ஊர்ல ஒரு பழமொழி உண்டு. ‘கிணத்த சுத்தி விளையாடுகிற புள்ளைக்கு கிணத்துலதான் சாவு’ என்று. இப்போது பிளாரன்ஸ் மேரி கொடுத்த டைரிய நம்ம ஏட்டம்மாவே படிச்சிட்டு முகஞ்சுழிக்குது. ‘இது ராஜரத்தினத்திற்கு தேவைதானா? சரி! அத்த உடுங்க பிரதர், எதஎத பங்கு போடறதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லையா?’ என்று சாதாரண ஏழைக் கிருத்துவன் கேட்பது நியாயம்தான். என்ன பண்றது?! பங்குத் தகராறுன்னா… கொஞ்சம் அப்பிடி, இப்பிடி இருக்கத்தான் செய்யும். தெரியாமலா ‘சர்ச்ல இதெல்லாம் சகஜமப்பா…ன்னு’ மதுரை சேசு சபை தலைவர் தேவதாசு சொன்னாரு. அவருக்கு இருக்கிற ‘வெத்தலப்பெட்டி’ அனுபவம் நமக்கெல்லாம் வருமா?
வேளைக்கு மூணு வகை கறிய வறுத்துப்போட்டு, சாம்பல் மாறாத சிம்லா ஆப்பிளையும், ஊட்டி ஆரஞ்சையும் வயிறுமுட்ட திங்க வச்சு, பூசைக்கு பூசை ஒயின்ன ஊத்திவுட்டு, கரந்த பாலுல துளி தண்ணி கலக்காம சுரண்ட காய்ச்சி எடுத்து, அதுல பிஸ்தா பருப்பைக் கொட்டி மெதக்கவுட்டு, அதை இதமான சூட்டுல கழுத்து வரைக்கும் முங்க வச்சு, மினிஸ்டர் காட்டன்ல அங்கி தச்சி போட்டுவுட்டு, அதுக்கு நாடாவையும் கோத்துக்குடுத்து, இலவம்பஞ்சு மெத்தையும் போட்டுவுட்டு, படுக்கப்போற நேரம் பாத்து… நீ தனியாகத்தான் படுக்கணுமின்னா… எந்த மழுமட்டையாவது கேக்குமா?! கொஞ்சமாவது இந்த சேசு சபைக்கு ‘புத்தி வேண்டாமா?! இல்ல… சேசு சபையில இருக்கிற முக்கால்வாசி குருக்கள் அப்படியா வளர்ந்தவங்க?
சினிமாவுல புது மாப்பிள்ளைய First Nightக்கு ‘ஏற்பாடு’ பண்ணி அனுப்புறத நாம பார்த்திருக்கிறோம். அதுவும் அஞ்சு நிமிசத்துல அந்த காட்சி முடிஞ்சிறும். ஆனால் வருசம் முச்சூடும் பல Fatherகள் மந்தைகளின் வரிப்பணத்தில் தங்களை இப்படித்தானே ‘தயார்’ செய்துக்கொள்கிறார்கள். அப்புறமென்ன… கன்னிமேரிக்கு தொண்டூழியம் செய்யப்போயி… கன்னித்தன்மை இழந்தது தானே மிச்சம் பிளாரன்ஸ் மேரிகளுக்கு.
தான் கற்பம் அடைந்ததைப் பற்றி ராஜரத்தினத்திடம் பிளாரன்ஸ் மேரி சொன்னபோது… ‘வெரி சிம்பிள் கருவ கலைச்சிடு’ என்று தமிழ் சினிமா வில்லன் மாதிரி சொல்லிவிட்டு புனித லூர்து அன்னை ஆலயத்தின் உச்சியில் இருக்கிற சிலுவை அதிர்ந்த மாதிரி எகத்தாளமாக சிரித்திருக்கிறார் Father Mr. ராஜரத்தினம். என்ன செய்வது Fatherரச் சொல்லி குத்தமில்ல. மந்தைகளைச் சொல்லணும். ‘Father ஸ்தோத்திரம்… Father ஸ்தோத்திரம்’னு நீயே ‘அப்பா’ ஸ்தானத்தைக் குடுத்துட்டு, அப்புறம் Motherஐ வச்சிக்கிறது தப்புன்னா… எந்த ரத்தினம் கேக்கும். இல்ல சேசு சபைதான் இதை காதிலே போட்டுக்குமா?! கேட்காது.
ஏனென்றால் அந்தப் புள்ளியில்தான் தூயவளனார் நிறுவன சாம்ராஜ்ஜியத்தின் ஒளிவட்டம் பாதுகாக்கப்படுகிறது.
ஓ… மந்தைகளே! அப்பத்தை ஏசுவின் சதையென்றும், ஒயினை ஏசுவின் ரத்தமென்னும் பாதிரிகள் உங்களுக்கு தந்துவிட்டு, ஆனால் அவர்களோ நீங்களெல்லாம் தாயாக மதிக்கின்ற கன்னியாஸ்திரிகள் சதையையும், ரத்தத்தையும், கற்பையுமல்லவா உறிஞ்சுகிறார்கள். ‘நம்ம சாமியார்’ என்று நீங்கள் இன்று மௌனம் சாதிக்கலாம். பிளாரன்ஸ் மேரி இடத்தில் நம்முடைய அக்கா, தங்கை இருந்திருந்தால்… என்ன செய்திருப்பீர்கள்?! மறு கன்னத்தைக் காட்டியிருப்பீர்களா?! சொல்லுங்கள்.
ஒரு துறவிக்கு மிதமிஞ்சி பூர்த்தி செய்யப்பட்ட மற்ற எல்லா சுகபோகங்களும் சேர்ந்துதான் பாலியல் என்கிற காமத்தைக் கோருகின்றன. துறவி என்று நம்பி சாந்தமாக நீங்கள் ஜெபிக்கும் போதெல்லாம் பாதிரியின் எண்ணம் விஸ்வாமித்திரன் ரூபத்தில் வந்து எள்ளி நகையாடுகிறது. துறவு என்கிற அந்த போலியான உண்ணாவிரத முறையிலேயே ‘பழச்சாரு’ என்கிற அந்த முடிவும் அடங்கியுள்ளதை நீங்கள் பார்க்க மறுப்பதன் விளைவுதான் ராஜரத்தினங்கள்.
குடும்பம் இருப்பவனுக்கு ஒரு சாப்பாடு. சத்திரத்தில் இருப்பவனுக்கு ‘பல’ சாப்பாடு. – இந்த இரண்டாவது வகையறாதானே பாதிரிகளும், சாமியார்களும். ஒரு மனிதனாக பிறந்தவனுக்கு பாலியல் தேவையென்பது ஒரு சாதாரண எதார்த்தத் தேவைதான். இதில் ஆச்சரியத்திற்கோ, அதிசயத்திற்கோ ஒன்றும் இடமில்லை. ஆனால் அதைமூடி மறைத்துக்கொண்டு, மக்களை ஏமாற்றி, மடமையில் ஆழ்த்தி, நம்பவைத்து கருவறுக்கின்ற காரியத்திற்கு ‘துறவு’ என்று ஒளிவட்டத்திற்குள் சல்லாபம் புரியும் இந்த கேடுகெட்ட கிரிமினல் கும்பலை, கும்மாளம் போடவிட்டு இன்னும் எத்தனை காலம் வேடிக்கைப் பார்ப்பீர்?!
இல்லை. இதற்கெல்லாம் எந்த சேசு சபை வந்து பதில் சொல்லப்போகிறது. 16வது அல்ல 100வது பெனடிக்ட் வந்தாலும் உங்களுக்கு பதில் கிடைக்கப்போவதில்லை. மாறாக கர்த்தர்மேல் பாரத்தைப் போடச் சொன்னார்கள். இருந்தே இருக்கிறது தவறாமல் எல்லாருக்கும் மறுகன்னம்.
இப்படியே தான் நாட்டின் ஒரு பெருங்கூட்டத்தை பக்தி என்கிற ஒரு கஞ்சா போதையில் வைத்திருக்கின்றன மதங்கள். ‘மதம் என்பது அபினி போன்றது’ என்று இந்த அவலத்தைத்தான் கார்ல் மார்க்ஸ் விளக்கினார்.
இனி கன்னியாஸ்திரிகளை கற்பழிக்க எங்கோ வெளியிலிருந்து சோத்து மூட்டை கட்டிக்கொண்டு ஒரு காமுகன் வரத்தேவையில்லை. அத்தகைய காமுகர்கள் அங்கிக்குள்ளேயே உலாவுகிறார்கள். சங்கராச்சாரி, பிரேமானந்தா, நித்தியானந்த வரிசையில் மற்றவர்களை தள்ளிவிட்டு நிற்கிறார்கள் பாதிரிகள். காமத்திற்கேது மத பேதங்கள்.
”இவர்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். தேவனே! இவர்களை மன்னியும்” என்று தன்னை சிலுவையில் அறைந்தவர்களை, தான் சாகும் தருவாயில் கூட, ஏசுவின் மன்னிக்கின்ற பெருந்தன்மையை குறிக்கின்ற புகழ்பெற்ற விவிலியத்தின் வசனம் இது. இதை அப்படியே ராஜரத்தினத்திற்குப் பொருந்தினால், அவர் ஒருமுறை அல்ல, நூறு முறை மன்னிக்கப்படுவார். இந்தப் பாவ மன்னிப்புத்தான் அடுத்தடுத்த பொறுக்கித்தனத்திற்கு அடியெடுத்துக் கொடுக்கிறது. எனவே பாவ மன்னிப்புகள் இருக்கும்வரை பாவத்திற்கு பஞ்சமில்லை. ஆனால் ‘கர்த்தர் ஆயிரம்முறை பாவமன்னிப்பு வழங்கினாலும், நான் விடப்போவதில்லை’ சொல்லுகிறார் பிளாரன்ஸ்மேரி. வாழ்த்துக்கள், அப்படியே செய்யக் கடவதாக…!
பாதிரிகளின் இந்த ஆபாசத்தையும், ஆணாதிக்கத்தையும் விரும்பாதவர்கள் ஒன்று தங்களின் கைகளில் கனக்கும் ‘புதிய, பழைய ஏற்பாடுகளை’ வீசியெறிய வேண்டும். அல்லது எல்லாம் கர்த்தருடைய கிருபை’ என்று சிலுவையைப் போட்டுக் கொண்டு மழுங்கிக் கிடக்க வேண்டும். ஒரு பாதிரியார் ‘ஒரு தேடப்படும் கிரிமினல் குற்றவாளி’ என்று ஆனப்பிறகும், ‘தினமும் போலீஸ் ஸ்டேசனில் காலையும், மாலையும் கையெழுத்திடவேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டபின்பும், நமக்கு ரோசம் வருவதில்லை. பதிலாக உடனிருந்த பெண்ணின்மீது பழி சுமத்த மட்டும் உங்களுக்கு என்ன யோக்கிதை இருக்க முடியும். ஆண்களாக பிறந்த ஒவ்வொருவரும் தலைகுனிய வேண்டிய விசயமில்லையா இது.
கருவை சுமந்த கன்னியாஸ்திரியின் சீருடையை உருவி எரியும் இந்த சேசு சபைக்கு, அதற்கு காரணமான ராஜரத்தினத்தின் அங்கியை கழட்ட, ஏன் துப்பில்லை? ஏனென்றால் அப்படி ஒன்று நடந்து விட்டால், அந்த சேசு சபையே அம்மணமாக நிற்க வேண்டி வரும் என்று அந்த சபைக்கே தெரியும். ‘இது மேல் சாதி சாமியார்களின் சதி’ என்று ராஜரத்தினம் சொல்வது உண்மையானால் அந்த சாமியார்களின் பெயர் பட்டியலை வெளியிட முடியுமா?! முடியாது. ஏனென்றால் எல்லா சாதி தில்லுமுல்லுகளும் சேர்ந்துதான் கூட்டாஞ்சோறு தின்னுகிறார்கள். மாட்டிக்கொண்ட பிறகு ‘நானில்லை, அவனில்லை’ என்று லாவணிப்பாடுகிறார்கள்.
திருடியதில் சமமான பங்கும், சரியான எடையும் இருக்கின்றவரை இவர்களுக்குள் பிரச்சனை வராது, என்பதுதான் திருடர்களின் பெருந்தன்மையின் எல்லை. எனவேதான் முறை தவறி திருடும் இவர்கள் முறையான பங்கை எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பில் மண்விழும்போதுதான் ஆளுக்காளு போட்டுக்கொடுப்பதும் அடியாள் சேர்ப்பதும் நடக்கிறது.
பாதிக்கப்பட்ட பிளாரன்ஸ் மேரி பக்கம் நிற்க ஒரே ஒரு சேசு சபை குருவுக்கும் ஆண்மை கிடையாது. மன்னிக்கவும்… யோக்கியதை கிடையாது.
முதலாளிகளால் ஓசோன் படலம் ஓட்டை
பாதிரிகளால் தூயவளனார் சாம்ராஜ்ஜிய குடையில்
சல்லடைகண் ஓட்டை
ஸ்தோத்திரம் ஆண்டவரே!
கர்த்தராகிய ஏசுகிருத்து ராஜரத்தினத்துடன்
இருப்பாராக…!
கா…ம…ன்
உயிர்மைக்காரன் காடுகளை அழிக்கிறது தெரியுமாடே!
25/27 |
நமக்கும் இந்த சிறுபத்திரிகைகாரவுகளுக்கும் எப்பவும் ஒத்துக்கிடாது பாத்துக்கிடுங்க! முன்னயாவது அப்பக்கைப்ப கொஞ்சமோ, நஞ்சமோ ஒருபாடு கிசுகிசு வெட்டுக இல்லாம வரும். ஊட்டி தளைய சிங்கம் மேட்டரு, குத்தாலத்துல அண்ணாச்சி விக்ரமாதித்யன் தண்ணியப் போட்டு பண்ணுண அலம்பல், ஜெயமோகன் யாரை அடிச்சாக, சாரு யாருகிட்ட அடிவாங்குனாகன்னு ஒரே ஜாலி ஜம்பர்தான். இவுகதான் சாகவரம் பெத்த இலக்கியம்னு எதை எதையோ சொல்லி பீலா விடுவாக. நம்மளக்க கேட்டா இவுகளோட கிசுகிசுதாதன் சாகாவரம் படைச்ச இலக்கயம்னு அந்த மகர நெடுங்குழைக்காதன் சத்தியமா சொல்லுவேன்.
ம்..ம்.. அதெல்லாம் ஒரு காலம். இப்ப பாத்தீகன்னா எல்லா கிசுகிசு சங்கதிகளையும் நெட்டுல சட்டுப்புட்டுனு எழுதி தள்ளுராகளா, அதுவும் பதிவுலகத்துல கீ போர்ட வச்சே டான்சாடுற நம்ம மொக்கைத் தம்பிமாரு இதுமாதிரியான நியூசெல்லாம் தினமும் ஊர் பூரா போன்ல கூப்ட்டு பத்த வச்சர்ராக. அதுல இருந்தே சிறு பத்திரிகைகள வாங்குறுத நிறுத்தி தொலைச்சாச்சு. பிறவு ஒவ்வொண்ணையும் 30 ரூபா, 50 ரூபா வாங்குறது தெண்டமுல்லா?
நேத்தைக்குத்தான் நம்ம கூட்டுக்காரவுக அவுகளும் என்னாட்டம் இலக்கியவியாதி சகவாசம் வச்சிருந்தவுகதான், இந்த மாசத்து உயிர்மைய கொடுத்தாக. என்னன்னு கொஞ்சம் மேஞ்சு பாத்தா, அடங்கொப்புறானே, என்னத்தைச் சொல்ல……!!!
ஆமா நைனா ஒவ்வொரு தபா நீ உயிர்மை வாங்கிக்கீறீயா, அதுல இன்னா ருக்கும்? அட்டையில மல்டி கலர் மாடுலேஷன். அதான்பா கருத்து கந்தசாமி டிசைன்! குற்றம், தேகம், வதை, இரவுன்னு என்னன்னமோ ராவா அட்ச்சு விடுவான். அப்பாலிகா தலையங்கம் பாத்தா மன்ஸ்ய புத்ரன் அண்ணாத்தே என்னமோ பயங்கரமா பொலிட்டிக்ஸ் பட்சவரு மேறி அவுத்து விடுவாறு, அப்பாலிக்கா நம்ம சாரு நைனா டப்பாகஞ்சிய சீம சாராய பாட்டில் ஊத்தி அட்ச மப்புல ஆறேழு பக்கத்துல சினிமா குனிமான்னு வாந்தி எடுப்பாரு, கொஞ்சம் அந்தாண்ட போனீன்னா இசை, அப்பால ஈரான் சினிமான்னு உடுப்பி அவியலாட்டம் உள்ள தள்ள ரொம்ப இம்சையா ருக்கும். புச்சா இன்னா பாத்தேன்னு கேக்குறீயளா…
மூணாவது பக்கதுல பாத்தீங்கன்னா உயர்மையில இருந்து இந்த வருசம் அறுபது நூலுங்க வருதாம், ஆறுக்கும் மேற்பட்ட வெளியீட்டு விழான்னு கன ஜோரா இருக்குங்க. என்னமோ போங்க, நம்ம கவி அம்பி மனுஷ்ய புத்திரனோட கம்பெனி இம்புட்டு பெருசா வளர்ந்து வருசத்துக்கு அறுபது புக்கு போடுறது சாதாரணமில்லிங்கோ; அப்படீன்னு தப்பா முடிவு செய்ஞ்சிராதீங்க சாமியோவ், கொஞ்சம் முழுசா படிச்சுபுட்டு ஒங்க கருத்த சொல்லுங்க.
முதல்ல பாத்தீகன்னா சுஜாதா நேர்காணல்னு ஒரு புத்தகம். அதுல கட்டிங் லைனா “ அவரது பரந்துபட்ட பன்முகத் தன்மை கொண்ட அக்கறைகளுக்கும் ஆளுமைக்கும் இன்னொரு சாட்சியம்” பளிச்சுனு போட்ருக்காக. ஏம்வே சங்க கால பெண்களை பேசிகிட்டு அப்படியே நைசா பாரிஸ் ஒயினைப் பத்தி பேசுனா அது பன்பட்டர்ஜாம் அக்கறையா? நல்லாருக்கு நைனா உங்க இலக்கணம்.
இந்த ஸ்ரீரங்கத்து பாப்பார ஐயங்காரு ஏதோ கம்யூட்டர பத்தி எழுதினாரு, கூடவே கதங்களயும் எழுதினாருங்கறதெல்லாம் இருக்கட்டும். அவரு ஏன் ஒரு லிபரல் பாயை பிடிச்சு தன்னோட புக் ரைட்ச கொடுத்துட்டு போகணும்? மத்யமர் கதைங்கள்ள இட ஒதுக்கீட்டை கேலி பண்ணி, பிராமண சங்கத்துல விருது வாங்கி, சங்க பரிவாரத்து ஜீக்களுக்கு நமஸ்காரம் போட்ட கையோட சலாம் அலைக்கும் பாய்னு புக் போட விட்டுருக்காருன்னா, அதுதாம்டே பார்ப்பன நரித்தந்திரம். சரி இதுக்காக நம்ம ம.புத்திரனை பாய்னு நினைச்சுக்காதீக. அவுக பாய் இல்ல பிசினஸ்மேன்.
இல்லேன்னா சுஜாதாவோட புக்குங்கள போட்டு, நைசா லைப்பரரிக்கு தள்ளி ஒரு பதிப்பக சாம்ராஜ்ஜியத்தையே உண்டாக்கிட்டாருல்லா, அதுதாம்டே பிசினஸ் தந்திரம். சரி இந்த பாய் எப்படி லைப்ரரி ஆர்டரு பிடிக்குராறு, எவனுக்காவது தெரியுமாடே?
போலே போக்கத்த மூதிகளா, இதுல என்ன இரகசியம் வேண்டிக் கிடக்கு? அப்படியே அந்த அறுபது நூலு நாயன்மாரு பட்டியலப்பாருடே…..
பதிவுலகத்துல இருக்குற சாதா, ஸ்பெசல் சாதான்னு எல்லா பயபுள்ளைகளும் தமிழச்சி தங்கபாண்டியன சாரு புக் பங்ஷன்னுல ஜொள்ளுவிட்டதை எழுதியிருக்கானுகல்லா, அந்த அம்மாதான் இந்த லைப்ரரி ஆர்டர் தேவதை…. எப்புடி?
“பாம்படம்” கரிசல்பூமியின் நினைவுப் பதிவுகள்னு ஒரு புத்தக விளம்பரம். நம்ம தேவதையம்மா எழுதினது. என்ன எழுதியிருப்பாக? “பாம்படமாம் பாம்படம், விருது நகரு பாம்படம், தங்கம் தென்னரசு பாட்டியோட பாம்படம், லைப்ரரி ஆர்டருக்கான பாம்படம்,” இதுதாம்டே விசயம். அடுத்து பாத்தா லைப்ரரி ஆர்டர் தேவதையப்பத்தி மத்த பயபுள்ளக ஆகோ ஓகோன்னு எழுதுன ஐஸ் பேக்டரியவே ஒரு புக்கா போட்டுரக்கானுக, “தமிழச்சியின் பதிப்புலகம் – சில மதிப்பீடுகள்” என்னாமா யோசிக்கிறானுக,,, டெரரால இருக்கு…. அது சரிடே பதிவுலகத்துல இருக்குற ஒரிஜினல் தமிழச்சி இவுகதான்னு குழிம்பிக்கிடாதீங்கடே, நம்ம அக்கா பாரீசுல இருக்காக அவுக வேற…
சரிதானுங்க, லைப்ரரி ஆர்டரோட அடுத்த குல்சா வி.ஐ.பி யாருன்னு தெரியுமாங்கோ? அவருதான் நம்ம வி.சிறுத்தைகளோட எம்.எல்.ஏ இரவிக்குமார். அடிக்கடி கருணாநிதி ஐயாவோட பக்கத்துல நின்னு “இந்தப்பூனையும் பிசா சாப்பிடுமா”ங்குற கதியில போஸ் கொடுப்பாருங்க. அவிகளுக்கென்ன, இப்பதான் ரியல் எஸ்டேட், பஞ்சாயத்துன்னு லைஃப்புல நல்லா செட்டிலாகிட்டாருங்கண்ணா. தமிழ்நாட்டுல இருக்குற இலக்கியவியாதிங்க எல்லாம் கவர்ன்மெண்டு காரியங்கள சாதிக்கணும்னா நம்ம எம்.எல்.ஏவைத்தான் தொடர்பு கொள்றாங்களாம்… அந்த படிக்கு ஐயாவோட நாலு புக்கு ரிலீசாகுதாங்க…
“அண்டை அயல் உலகம்“னு ஒரு புத்தகம். இது ஜூனியர் விகடன்ல வந்ததுன்னு நினைக்கிறேனுங்க. அத பாத்தீங்கன்னா ஃபுல்லா நம்ம இந்திய அரசு வெளிநாட்டுக் கொள்கை என்னவோ அதயே ஏகப்பட்ட விவரங்களோட -அல்லாம் நெட்டுல சுட்டதுதாங்க – அடிச்சு விடுவாறு. இன்னைக்கு தமிழ்நாட்டுல பஞ்சாயத்து பண்றவங்க நாளைக்கு நீரா ராடியா அக்கா மாதிரி உலகத்துக்கே பண்ணனுங்குறதுக்கான டிரெயினிங்னு வச்சுக்கங்க. ஆக நம்ம எம்.எல்.ஏ புக்க போட்டுக்கிட்டா அவரு விட்டையோட மத்த விட்டைங்களையும் லைப்ரரிக்கு தள்ளிரலாங்குறதுதான் ஹமீது பாயோட திட்டம். புரிஞ்சுதுங்களா?
ஒரு காலத்துல இவுங்க எல்லாம் ஒரு கூரூப்பாத்தான் அலைஞ்சாங்க. எம்.எல்.ஏ அண்ணன் சேரிப்புயல் கட்சியில சேர்ரதற்கு முன்னாடி காலச்சுவடு அக்ரகாரத்துல நெய் பொங்கல் சாப்பிட்டுகிட்டு இருந்தாக. இப்போ ஒரு சம்மர்சால்ட் போட்டு கலைஞர் ஐயா வூட்டுக் டிகிரி காஃபி குடிக்கிறாங்கன்னா இந்த வளர்ச்சியை உயிர்மை பயன்படுத்தற மாதிரி காலச்சுவடு பயன்படுத்த முடியலைங்க.. அது தனிக்கதை…
இப்ப இந்த அறுபது நூலு நாயன்மாருங்கள்ள சிலர மட்டும் பாப்போம்..
இதுல முத நாயன்மாரு நம்ம சாரு மாமா.. மாமுவோட ஏழு புக்ஸ் இந்த வருடம் ரீலீசாம். இதுல 95 பர்சண்டேஜ் இந்த ஆண்டுல எழுதிக்கீறாராம். என்னா நைனா இது என்ன கட்டிங் மேட்டரா, பர்சண்டேஜ் கணக்கு கொடுத்துகினு…
இதுல முத நூலு தேகம்னு ஏதோ வதை நூலாம். சில பேரு அத சதை நூலுன்னு வியாக்கியானம் கொடுக்குறான். ஓசியில படிச்ச நம்ம தோஸ்த்துகிட்ட கேட்டா அல்லாம் குல்சா மேட்டராம். என்னபா இது அநியாயமா கீது? குண்டியடிச்சான், குஞ்ச ஆட்டுனான், நாக்க போட்டான்னு எழுதுனா அது உலக இலக்கியமா? நெட்டுல மூணு எக்ச போட்டா குல்சா மேட்டரெல்லாம் ஜல்சாவா கொட்டிகினு இருக்கும். இத ஒரு நாவலுன்னு போட்டு பங்ஷன் நடத்தி அதை நாப்பத்திநாலு வெட்டி பாய்ஸ் விமர்சனும்னு போட்டு… படுத்துராங்கப்பா….
செக்ஸ்னா அது ஐஞ்சு நிமிசத்து மேட்டரு, வந்தமா, முடிச்சமான்னு போறதுக்கே ஜனத்துக்கு டைம் இல்ல, அதப்போயி இந்த நைனா 26மணிநேரமும் பேசிக்கினு, எழுதிக்கினு, போய் ஒரு நல்ல டாக்டரப்பாருயா வெண்ணை!
அடுத்த புக்க பாத்தா அது நித்யானந்தாவோட அல்சா மேட்டரு.. இந்த சாமியத்தான் நம்ம நைனா ஒரு காலத்துல கும்பிட்டுகினு, அதயும் போட்டோ புடிச்சு போட்டு பி.ஆர்.ஓ வேல பாத்துகினு இருந்தாரு. அப்பாலிக்கா ரஞ்சிதா சீன் வந்துச்சா, உடனே நைனா நல்ல புள்ளயாட்டம் கூட்டத்தோட கூட்டமா குன்சா தர்ம அடி போட்டு எஸ்ஸாயிட்டாரு. நாஸ்டாவுல உப்ப போட்டு தின்னா இந்த நைனா இப்பிடி செய்யுமா?
சாமி அருள் வாக்கு சொன்னதையும் பிசினஸ் பன்றான், சாமி சரசமாடிச்சுன்னா அதயும் பிசினஸ் பன்றான், நைனா இது உனக்கே அசிங்கமா இல்ல? எபெட்டிஷ்னா என்னான்னு அல்லாருக்கும் டியூஷன் எடுக்குறிரீயே இதுதான்பா டிரிபிள் எக்ஸ் ஃபெட்டிஷ். இதெல்லாம் நைனாவோட குத்தமில்லப்பா. நைனாவுக்கு கூச்ச நாச்சமில்லாம சில குல்சா மொக்கைஸ் செம்பு தூக்குறான் பாரு, அவன பிடிச்சு கேக்கணும்.
“கனவுகளின் நடனம்” இது நைனாவோட சினிமா புக்காம். நைனா சினிமாவப்பத்தி எழுதலேன்னு எந்த குயந்தை அழுதுச்சு? இந்த டிஜிட்டல் குப்பைங்கள புக்கா போடுறான்னா என்னா தைரியம்? இதுபோக நைனா எழுதுன அஜால் குஜால் இலக்கிய கிசுகிசுங்க எல்லாம் மூணு புக்சா வந்துருச்சாம். கனிமொழி வந்து காமராஜ் ஹால்ல பேசியாச்சா, இத வச்சே ஹமீது பாய் அல்லா புக்கையும் லைப்பரரிக்கு தள்ளிருவாரு…இனி இன்டருநெட்டுல பாக்க முடியாதவனெல்லாம் நைனா புக்க லைப்ரரியில படிச்சு பரலோகம் போவப் போறான். சாவுங்கப்பா…
ஸ்பெக்ட்ரல் ஊழல்ல லம்பா அடிச்சா கையோட கனி அக்கா காமராசர் ஹால்ல நைனா சாருவோட நட்ப பத்தி பேசுதுன்னா, என்னாத்தச் சொல்ல? அன்னிக்கு அங்கன சம்சா, காஃபிய முழுங்குன ஒரு பயலுக்கும் அக்காவோட ஊழல் கதக்கு ஒரு ஞாயத்தை கேக்கணும்னு தோணலையே?
அப்பால பாத்தா நம்ம எஸ்.ராவோட “துயில்” நாவல். இதுக்கு கட்டிங் லைனா என்னா கொடுத்துகிறான்னா, ” மனித உடல் என்னும் மகத்தான பிரபஞ்சத்தில் நிகழும் எண்ணற்ற விசித்திரங்களைப் பேசும் எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவல்”……
ஏம் வே எஸ்.ரா? இது உமக்கே ரொம்ப ஓவரா இல்லையா வே? மனித உடல்ல என்ன எழுவு விசித்தரத்த கண்டீரு? கக்கா, ஒன்னுக்கு, சளி, எலும்பு, தோலு, இதுதாம்வே எல்லாத்துக்கும் இருக்கு? இதுல ஆம்பளயாளுகன்னா விந்து, பொம்பள ஆளுகன்னா மென்சஸ்னு இதுல என்ன எழவுயா பிரபஞ்ச ரகசியம் இருக்கு? நீரு ஆ.விகடனுல தொடர் எழுனங்கறதுக்காக வீட்டுக்கு விருந்தினர் வந்தா சிரிக்கணும், தேத்தண்ணி கொடுக்கணும்னு காலனாவுக்கு தேறாததையெல்லாம் எழுதினீரு. அந்த கணக்கே இன்னும் முடியலேன்னா பாத்தா அதுக்குள்ள ஒரு நாவல எழுதிட்டீரு. நீரு எழுதுன வசனத்தையெல்லாம் பாலா குப்பைன்னு தூக்கி எறியிதாருன்னு சொல்லுதாக, உண்மையாவே?
எழுத்துங்குறது ஒரு புள்ளத்தாச்சி வலியோட பிரசவம் பாத்து குழந்தைய தர்ரது மாதிரி. அதை பிளாஸ்டிக் பொம்மை மாதிரி தயாரிச்சா அதுல என்னவே விசித்திர வெங்காயம் இருக்கும்?
சரி அடுத்த மேட்டர பாப்போம்.
இந்த அறுபது நூலு நாயன்மாருல்ல இந்த வாட்டி மாஸ்டர் பீஸ் என்ன தெரியுமா? ரசிகமணி டி.கே.சி கடிதங்கள்னு ஒரு புத்தகம். 944 பக்கமாம். 600 ரூபாய் விலையாம். முன்னாடி பதிஞ்சா 450 ரூபாயாம். இதுல அண்ணாச்சி மத்த தம்பிமார் 24 பேருக்கு எழுதின கடுதாசிங்க தொகுத்திருக்காங்களாம். இதுக்கு கட்டிங் மேட்டரா கரிசல் காட்டு செக்ஸ் தாத்தா கி.ரா எழுதுன முன்னுரையில இருந்து போட்டுருக்காக…..
” அவருடைய ஒரு கடிதத்தின் முடிப்பு இப்படி இருக்கும்….” ” என்னுடன் இருந்த நண்பர்களும் எல்லாருமாக நேற்றுப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். தங்கள் அண்ணியும் குற்றாலமும் ஆழ்வார்குறிச்சிக்குப் போயிருக்கிறார்கள். தங்கம் தென்காசி. ஆகவே நான் இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று சிவமே என்றிருக்கிறேன். பலராமும் துணைக்கு இருக்கிறார். அருவிச் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது. மற்றபடி நிசப்தம். மணி காலை 3.3.0″இதுமாதிரி 944 பக்கத்திலும் இருக்குதுன்னா அட கொலைகாரப் பாவிகளா, இந்த கருமாந்திரத்தை புக்கா போடுறதுக்கு எத்தனை ரீம் மேப்லித்தோ பேப்பர், அந்த பேப்பரை தயாரிக்கிறதுக்கு எத்தனை மரத்தை வெட்டி அழிச்சாங்களோ! உயிர்மை பதிப்பகம் காடுகள அழிக்குதுன்னு இப்பவாச்சும் விளங்குதா ஆக்கங்கெட்ட மூதிகளா?
டி.கே.சிக்கு ஏதோ அரசு குமாஸ்தா வேலைக்கு இன்டர்வியூ வந்துதாம். அன்னிக்கு காலையில அண்ணாச்சி கிளம்பும்போது குறுக்க பூனை ஏதோ வந்துச்சுன்னு கேன்சல் பண்ணிட்டராம். அவரு பெரிய ஜமீன்ங்கிறதுன்னால மாளிகை வீடு, தாமிரபரணி சோறு, அவியல்னு உபச்சாரம் பலமா இருக்கும். தமிழ்நாட்டு இலக்கியவியாதிகளை கூப்புட்டு தங்க வச்சு பேசி அழுகு பாத்தே இந்த மனுசன் காலத்தை ஓட்டியருக்காரு. அந்த பூனை மட்டும் அன்னிக்கு வரலேன்னா இந்த 900 பக்கம், ஏகப்பட்ட மரங்க எல்லாத்தையும் காப்பாத்தியிருக்கலாம்.
எங்கூருக்காரகுன்னு பாத்தா மானத்த கப்பலேத்துராரே? ஏலேய் காலையில மூணு மணிக்கும் நிசப்தமாத்தாம்டே இருக்கும், அருவின்னா சத்தம் இருக்காதாடே…இதையெல்லாம் ஒரு பெருசு கடிதம் எழுதி அதப்போய் புக்கா போடுறான்னா இந்த பாய்க்கு என்னா தைரியம்? இனி இந்த எழவும் லைப்ரரி ஆர்டருங்குற பேருல மக்கள் பணத்தை கொள்ளையடிச்சு தமிழ்நாடு முழுக்க போகப்போவுது..
இதுல உங்களுக்கு ஒரு எக்ஸ்குளூசிவ் மேட்டரு ஒன்னு சொல்லுதேன், யாருகிட்டேயும் சொல்லாதீங்க.. இந்த டி.கே.சி பேரன்ங்கள்ள ஒருத்தன் நம்ம கூட்டுக்காரனோட ஆபிசிலதான் வேல பாக்கனாம். அதுல என்ன விசேசம்னா அந்த பயபுள்ளைக்கு தமிழே படிக்க தெரியாதாம்… ஆக தமிழுக்கு தொண்டு ஆத்துன பெரிசு பரம்பரைக்கே தமிழ் தெரியாத போது அந்த பெருசு அப்பம் சாப்பிட்டு குசு விட்ட கதையெல்லாம் புத்தகமா நாம படிக்கணும்னா, ஒண்ணு மட்டும் சொல்லுதேன், இந்த தமிழ்நாடு நாசமா போகட்டும்லே…
இந்த புக்ஃபேருக்கு வாசல்லேயே காத்துக்கிடந்து எந்த பயபுள்ளையாவது இந்த புக்க வாங்கிட்டு வந்தீகன்னா புடிச்சு கடிச்சு வக்கப்போறேன், அம்புட்டு கொலைவெறியில இருக்கேன்…..
சரி இந்த பெருசு புத்தகத்துக்கு முன்னுரை எழுதுன கரிசல் செக்ஸ் தாத்தா கி.ரா இருக்காருல்ல… அவருக்கு மத்த இலக்கியவியாதிமாரு எழுதுன கடிதங்களையும் புக்கா கொண்டு வாராகளாம்… அடுத்து என்ன சாரு மாமாவுக்கு, மாமா சாரு எழுதிய நேஹா கடிதங்களா இல்ல டோண்டு இராகவன் கேள்வி பதிலா… நல்லா இருங்கடே !!!
அடுத்து பாத்தீகன்னா நம்ம ஃபீரிலேன்சு பத்திரிகையாளர் மணாவோட புக்காம். என்னண்டு பாத்தா… “கமல்ஹாசன்: நம்காலத்து நாயகன்” ண்டு தலைப்பு போட்டுருக்கான். கமலஹாசன் நாயகனில்ல, வில்லன்னு எந்த கபோதி சொன்னான்? இதுல கமலைப் பத்தி பிரபல ஆளுமைங் எழுதுன பதிவுகளும் போட்டாவும் வருதாம்.
திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை பிரஸ்ஸூங்களுக்கு போனா தெருவுக்கு ஒரு ரஜனி ரசிகன், கமல் ரசிகன், விஜய் ரசிகன், அஜித் ரசிகன்னு பிரிண்டாகுறதை பாக்கலாம். அதுல இல்லாத பதிவா, போட்டாவா…ஏம்டே இப்படி ஊரை ஏமாத்துரீக….நம்ம பாய் ஏற்கனவே “உன்னைப் போல ஒருவனில்” ஒரு பாட்டு எழுதுனத வச்சு கமலை ஒரு ஏகாந்த யோகியாக சித்தரிச்சு பரவசமான பார்ட்டி. அதுக்கு நன்றிக்கடன்தாம்டே இந்த புக்கு….
இதுக்கு அடுத்தாப்ல நம்ம தத்துவ அறிஞர் யமுனா ராஜேந்திரனோட மூணு புக்கு போட்டுருக்காக.. இதுல புரட்சி, உலக சினிமா, ஆவணப்படம்னு டைட்டிலெல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா அண்ணாத்தே எது எழுதுனாலும் காசியில ஆரம்பிச்சு கன்யாகுமாரி வரை இழுத்து இழுத்து பேசியே கொல்வாரே… முன்ன ஒரு தடவை உயிர்மையில பிழை திருத்தும் வேலை செய்யுற ஒரு நண்பரைப் பாத்தேன்.. அப்பதான் அவரு சொன்னாரு, “யமுனா ராஜேந்திரன் கட்டுரைகளை திருத்தி எழுதுற துக்கத்துக்குகூட மனுஷ்ய புத்திரன் சம்பளம் போறவே போறாது”ன்னு.. இந்த வாட்டி இந்த மூணுபுக்குக்கும் யாரோட லங்கோடு கிழிஞ்சதோ தெரியல..அவுகளுக்கு நம்ம அனுதாபங்களையாவது தெரிவிச்சுக்கிடுவோம்.
“தமிழக மேலவை” ங்குற தலைப்புல கே.எஸ்.இராதாகிருஷ்ணன் புக்கு வருதாம். இது சத்தியாம லைப்புர்ரி ஆர்டருக்கான புத்தகம். அண்ணாத்தேயும் தி.மு.கவுல முக்கிய தலைங்குறதால பாய் இவர வச்சு வருசத்துக்கு ஐஞ்சு புக்காவது போடுவாறு. இனி “புதிய சட்ட மன்றம் கட்டிய கதை, மு.கவின் மாமல்லபுர விஜயம், அழகிரியின் டெல்லி வாசம்னு” புது புது புக்குங்க வரும். இதுகளையெல்லாம் வாசிக்கிறதுக்கு தமிழ்நாடு எத்தனை கொடுத்து வச்சுருக்கணும்!!!
வா.மு.கோமுங்கறவரோட இரண்டு நாவலும், ஒரு சிறுகதையும் வருதாம். இவரு யாருன்னு விசாரிச்சா நம்ம நைனா சாருவே இவர தன்னோட சீடன்னு அறிவிச்சிருக்கராம்ல. அப்படின்னா இவரும் ஜல்சா மேட்டரு ரைட்டரா, காலம் ரொம்ப கெட்டுப் போச்சு, வேற என்னத்தைச் சொல்ல?
அப்பறும் பழமொழி, கிராமம், விளையாட்டு, சாப்பாடு ன்னு வெரைட்டியான நூல்கள். ஒரு காலத்துல இதுங்களயெல்லாம் மணிமேகலைப் பிரசுரத்துலதான் பாப்போம்.. இப்ப உயிர்மையிலும் பாக்கலாம்.
“வெள்ளைப் பல்லி விவகாரம்” என்ற தலைப்பில் லஷ்மி மணிவண்ணனின் சிறுகதை தொகுப்பு வருதாம். இந்த அண்ணன் யார்? ஒரு காலத்துல மனுஷ்ய புத்திரன், கண்ணனோட காலச்சுவடு ஆசிரியர் குழுவுல இருந்தவர். தன்னோட வாழ்க்கையை மனுஷ்ய புத்திரன் பாழாக்கிட்டாருன்னு சொன்னவரு. இப்ப பாழாக்குனவரு புண்ணியத்துல புக்க கொண்டு வராறு.. இவனுங்க ஏன் அடிச்சுக்குறான், எப்படி சேந்துக்குறான்ன்னு ஏதாச்சும் புரியுதாடே?
“விமலாதித்த மாமல்லன் கதைகள்” இது ஒரு சிறுகதை புக்காம். இவரும் கூட பிளாகுலயும், பஸ்சுலயும், டவிட்டர்லயும் என்னெல்லாமோ எழுதிப் பாக்குறாரு, ஒன்னும் களை கட்ட மாட்டேங்குது. இவரு மாமா சாருவை திட்டிகிடந்த்தை பாத்து பீதியான நம்ம மொக்கைத் தம்பிமாறுங்க ஜெயமோகனுக்கு எதிரா பாய இவருக்கு கொம்பையும் சீவி மச்சி சாருன்னு பட்டத்தையும் வச்சி அவர்கையில ஒரு குச்சி ஐச கொடுத்திட்டாகளாம்… சரி இருக்கட்டும். மச்சி சாரு 83ல போட்ட புக்கே இன்னும் விக்காம இருக்காம். அதையே பதிவுலகத்துல ஃபிரியாக கொடுக்குறதுக்கு மச்சி சாரு ததிங்கிணத்தோம் போடுறாரு.. இந்த இலட்சணத்துல இவரு கதைங்க அல்லாம் ஒரே தொகுப்பா வருதுன்னா என்னா அர்த்தம்?
அதுல காமடி என்னன்னா இந்த மச்சி சாருவோட வாழ்க்கை இலட்சியம் ஜனாதிபதி கையால விருது வாங்குறதாம். சனாதிபதி கையில விருது வாங்குறது இருக்கட்டும். உயிர்மையில நூல் வெளியீட்டு விழா லிஸ்ட்ல பாத்தீகன்னா, சாரு, எஸ்.ரா, ரவிக்குமார், தமிழச்சி, மனுஷ்ய புத்திரன் மெயின் சாமிகளுக்கெல்லாம் தனித்தனி விழா. ஆனா நம்ம மச்சி சாரு புக்கெல்லாம் 12 புக் வெளியீட்டு விழாவுல கூட்டத்தோட கூட்டமா கலந்து பொச்சு… லோக்கல்லயே தனிக்கவனிப்பு இல்லேங்குற பட்சுத்துல இவரு தன்னை இன்டர்நேஷ்னல் பிகரா நினைச்சு கனவு காணுராரே, நமக்கே ரொம்ப கஸ்டாமா கீது…. காட் பிளஸ் அமெரிக்கா அண்டு மச்சி சார்!@!
புரியாட்டி இன்னொரு உதராணத்த பாப்போம். சேலம் சிவராஜ் வைத்தியர் கிழமைக்கு ஒரு ஊர்னு விஜயம் செய்வாரு. இதுல பெரிய சிட்டிங்களுக்கெல்லாம் முழு நாள ஒதுக்குவாறு. சில்லறை நகரங்களையெல்லாம் ஒரே நாளில் நாலைந்துன்னு பாப்பாரு, இப்ப நம்ம மச்சி சாரோட கதையும் அதுதான், இதுக்கும் மேல புரியலேன்னா சிட்டுக்குருவி லேகியம் வாங்கி விழுங்குலே…..
அடுத்து பத்து கவிதை தொகுப்பு, எப்பவும் வர்றதுதானேன்னு நெனக்காதீக இதுல நம்ம பதிவுலக அம்பிமாறு எழுதுனதும் இருக்காம். வெள்ளிக்கிழமை மாலை கொசு, கழுதை மட்டமும் கழுவாத புட்டமும், பீக்கடல் அப்படீன்னு பதிவமாருங்க டிஜிட்டல்ல கிறுக்கியதை எடுத்து மூணு புத்தகமா போட்டா ஒரு முப்பது பதிவுல விளம்பரம் இனாமா தேத்தலாம். அப்புறம் என்ன புரவலருக்கு புரவலர், விளம்பரத்துக்கு விளம்பரம், வியாபாரத்துக்கு வியாபாரம்… கூட்டிகழிச்சு பாருலே இந்த மார்கெடிங் கணக்கு சரியா வரும்… இதுதாம்லே மனுஷ்ய புத்திரன் ‘டச்‘சு
ஆமா, இதெல்லாம் வரும்போது ”எட்டு லார்ஜ் குடித்தது தப்பில்லை. அடுத்து குடித்த பியர்தான் பிரச்சனை” ன்னு நம்ம எலக்கிய குருஜி சுந்தரின் பஸ்மொழிகளெல்லாம் ஏன் வரலையின்னு கேட்கப்பிடாது. பதிவுலகம் ரத்த பூமி, பதிவர் மேட்டர்லாம் டச் பண்ணா அப்புறம் ரணகளம் ஆகும், ரத்த ஆறு ஓடும் .. பீ கேர்புல். என்னத்தாம்லே சொல்லிகிட்டேன்…
அடுத்து நம்ம ஹீரோவ பத்தி பாப்போம் அதாம்லே அம்பி பாய் மனுஷ்ய புத்திரன். அவுகளோட 120 கவிதைகள் 300 பக்கங்களுக்கு மெகா புக்கா வருதாம்லே.. சாம்புளுக்கு ஒன்னு
இதற்குத்தானா?
பார்க்காமலே
இருந்திருக்கலாம்
பார்த்தும்
பாராத்து போல போயிருக்கலாம்
பார்க்க வந்தது
உன்னையல்ல என்று சொல்லியிருக்கலாம்
பார்த்த பின்னே
பாராமுகமாகவாவது இருந்திருக்கலாம்
பார்த்துப் பார்த்து ஏங்கவா
இவ்வளவு தூரம் வந்தது?
…………………………………………………….
தெரியாமத்தான் கேக்கறேன் பார்த்தான், பாக்கலேன்றத பின்னிப் பின்னி எழுத்திட்டு அது கவிதைன்னா அந்த கடவுளுக்கே அடுக்குமாலே..
“கக்கா போகலாம், போகாமலும் இருக்கலாம், போனாலும் பாதகமில்லை, தண்ணியிருந்தா கழுவலாம், இல்லாட்டி துடைக்கலாம், நாறினா ஓடலாம்,” ம்னு நான் என்டர் தட்டாத ஒரு கவிதை சொன்னா ஒத்துப்பியாலே?.. பொழப்ப பாருலே போக்கத்த மூதின்னு துப்பமாட்ட?
தி.மு.க. ஆதரவு பெருந்தலைகளை கொண்டு தன்னோட நூலக ஆர்டரை நைசா வளைச்சு பிசினஸ் சாம்ராச்சியத்தை சைசா தேத்தும் ‘பாஸ்’ மனுஷ்ய புத்திரன் கொண்டுவரும் 60 புத்தகங்களோட லட்சணம் இப்படித்தாம்லே பல்ல இளிக்குது. இதுக்காக்க எத்தன மரத்தை வெட்டிச் சாச்சாகளோ இதத்தாம்லே காடு அழியுதுன்னு சொல்லுதேன். இது சுற்றுச் சூழலுக்கு கேடு இல்லையா? இயற்கை வளமும், கருத்து வளமும் இப்படி வீணாபோவதை நாம ஆதரிக்கவாலே முடியும்… எதிர்க்கனும்லே…!
டிஸ்கி 1: பணி மாற்றமா, பணி உயர்வா, விசாரணையிலிருந்து விடுதலையா, ரியல் எஸ்டேட்டா, கட்டப் பஞ்சாயத்தா, நூலக ஆணைக்கு தள்ள வேண்டுமா, எதையும் புத்தகமாக போட வேண்டுமா – உடனே உயிர்மை பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். வெறும் பதினைந்து சதவீத கழிவைக் கொடுத்து உலகத் தரமான சேவையை பெறுங்கள்…
டிஸ்கி 2: இப்படி காடுகள் அழிந்தால் வெங்காய விலை எப்படி குறையும்?
டிஸ்கி 3: வினவு தளத்தில் வெளியாகும் படைப்புகள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!
தொடர் மழையை காரணமாகச் சொல்லி வெங்காயம், தக்காளி, பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு முருங்கைக்காயின் விலை பதினைந்து ரூபாய். முந்தானை முடிச்சு படமா ஓடுகிறது இந்த விலை விற்பதற்கு? சந்தையில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். சந்தையை ஒரு சுற்று சற்றிவிட்டு அப்பாடா என ஒரு பெருமூச்சுவிட்டபடி என்னிடம் வந்தார்.
“என்ன பை காலியா இருக்கு. எதுவும் வாங்கலியா?” என்றேன்.
“வெலயக் கேட்டா பயமா இருக்கு. நான் ஏதோ அப்பிடி இப்பிடி எதையாவது வாங்கிக்கிட்டு போயிடுவேன். ஆனா சாதாரண ஜனங்க, அதுவும் மாசம் மூவாயிரம், நாலாயிரம் சம்பாதிக்கிறவங்க என்ன செய்வாங்க பாவம்?” என்றார்.
கை நிறைய சம்பளம் வாங்குபவரையே மிரள வைத்திருக்கிறது இந்த விலைவாசி உயர்வு.
விலைவாசி உயர்வு, உயிர்வாழும் உரிமையைப் பறித்துவருகிறது. இதே நிலை நீடித்தால், ஒன்று பட்டினிச்சாவுகள் அதிகரிக்கும் அல்லது ஊட்டச்சத்துக் குறைவால் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆட்படுவதும், தொடர் மரணமும் அன்றாட நிகழ்வாகிவிடும்.
மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!
தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பிரசித்திப் பெற்ற மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாயாம். சென்ற வாரம் மல்லி என்றால் இந்த வாரம் கனகாம்பரம். கனகாம்பரமும் ஒரு கிலோ ஆயிரம் ரூபாயாம்.
சமீபத்திய தொடர் மழை காரணமாகவும், கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாகவும் விளைச்சல் வெகுவாகக் குறைந்துவிட்டதாம். நூறு கிலோ கிடைத்த ஒரு ஏக்கரில் இப்போது ஒரு கிலோதான் கிடைக்கிறதாம்.
விளைச்சல் குறைந்துவிட்டதே என விவசாயிகள் கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறது. நம்பி மல்லியைப் பயிர் செய்துவிட்டார்கள். விளைச்சல் இல்லை என்றால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.
பூ பயிரிடும் விவசாயிகள் மட்டுமல்ல இத்தொழிலையே நம்பி வாழும் பூக்களைக் கொய்வோர், பூக்களைக் கொள்முதல் செய்வோர், பூக்களை மொத்தமாக வாங்கி உதிரியாக விற்பனை செய்வோர், பூக்களைக் கோர்த்து முழம்போட்டு விற்பனை செய்வோர் என ஒரு பெரும் கூட்டமே பூக்களின் விலை உயர்வால் பாதிக்கப்படுவர்.
விளைச்சல் குறைவாலும், விலை உயர்வாலும் நுகர்வோருக்கு பாதிப்பில்லாமலா? பூக்களின் விலை உயர்வைக் கண்டு அங்கலாய்த்தாலும், கொத்துக் கொத்தாகக் கொண்டையில் பூச்சூடிக்கொள்ளும் மகளிர் பூச்சூடாமல் நிறுத்திக் கொள்வார்களா? இன்று மல்லி முழம் ஐம்பது ரூபாய். ஐம்பது ரூபாய் என்ன, நூறு ரூபாயானாலும் பெண்ணுக்கு அழகு பூச்சூடுவதுதானே! விடுவார்களா என்ன? பெண்களைச் சொல்லிக் குற்றமில்லை. அப்படித்தானே நமது மகளிர் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்கள் காலையிலும், வீட்டோடு இருக்கும் பெண்கள் மாலையிலும் பூச்சூடிக்கொள்வதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். கொண்டையில் சூடியப் பூக்கள் வாடி வதங்கி இறுதியில் குப்பைக்குத்தான் செல்கின்றன. யாருக்காகப் பெண்கள் கொண்டையில் பூக்களை சுமக்கிறார்கள்?
கோயிலுக்கோ அல்லது திருமணத்திற்கோ பூச்சூடாமல் சென்றுவிட்டால் இச்சமூகம் சும்மா விடுவதில்லை. சமூகத்திற்குப் பயந்தே பெரும்பாலான பெண்கள் பூச்சூடிக்கொள்கிறார்கள். பெண்களைப் போகப் பொருளாக மாற்றுகின்ற வேலையைத்தான் பூக்கள் செய்கின்றன. பிறருக்காகத்தான் அதாவது ஆண்களை கவருவதற்காகத்தான் நாம் பூச்சூடுகிறோம் என்பதை அறியாமலேயே பெண்கள் இதை ஒரு பண்பாடாகக் கருதி செய்து வருகிறார்கள். இன்று நடுத்தர மற்றும் மேட்டுக்குடிப் பெண்களிடம் வளர்ந்து வரும் குட்டைக்கூந்தல் கலாச்சாரம் பூக்களை சற்றே ஓரம் கட்டி வருவது ஒருவித முன்னேற்றம்தான்.
நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு ஆகிய விசேட நாட்கள் என்றால் பூக்களுக்கு ஏக கிராக்கிதான்.
ஆட்டோக்களிலும், லாரிகளிலும், பேருந்துகளிலும், அலுவலகங்களிலும், வீட்டுப் பூசை அறைகளிலும், கோயில்களிலும் உறையும் கடவுள் சிலைகளுக்கும், படங்களுக்கும் பூ அபிஷேகம் செய்து, பூ மாலைகள் சூடுவதை கிலோ ஆயிரம் ரூபாய் என்பதற்காக பக்தர்கள் நிறுத்தவா போகிறார்கள்? அறியாமையும் இயலாமையும் குடி கொண்டிருக்கும் நம் மக்களிடம் இதை எதிர்பார்க்க முடியாதுதான்.
எவ்வளவுதான் விலை ஏறினாலும் சந்தனக்கூடுகளிலும், பூச்சொறிதல்களிலும், பாடைகளிலும், மணமேடைகளிலும், தலைவர்களுக்காக வைக்கப்படும் அலங்கார வளைவுகளிலும்-மலர்ப்பாதைகளிலும்-வரவேற்பு மேடைகளிலும் கொட்டப்படும் பூக்கள் குறையவா போகிறது?
பிறந்த நாள் பொக்கேக்கள், பிரபல தலைவர்களின் சிலைகளுக்கும்-இறந்தவர்களின் உடலுக்கும் மலர் மாலை-மலரஞ்சலி என மலர்களின் பயன்பாடோ விரிந்து செல்கிறது.
மேற்கண்டவைகள் அவசியமான அடிப்படைத் தேவைகள் இல்லை என்றாலும், மக்களிடையே நிலவும் அறியாமையின் காரணமாகவும் அற்ப பந்தாவுக்காகவும்தானே பூக்கள் இவ்வாறு கொட்டப்படுகின்றன.
நமது மண் வளமும், நீர் வளமும் நம் சொந்தங்களின் உழைப்பும் இது போன்ற அவசியமற்ற, அர்த்தமற்ற தேவைகளுக்காக வீணடிக்கப்பட வேண்டுமா? மருந்துகளுக்காவும் உணவுக்காவும் பயன்படும் மலர்களை மட்டும் பயிர் செய்வது அவசியமானது. மற்ற தேவைகளுக்காக மலர்களை உற்பத்தி செய்வது அர்த்தமற்றது; அவசியமற்றது.
இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்படும் காலத்திலிருந்து நமது விவசாயம் என்பது சுதேசித் தேவையை விடுத்து பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காக மாற்றப்பட்டும் அந்த விதத்தில் அழிக்கப்பட்டும் வருகிறது. சுயதேவைக்காக இருந்த உணவுப் பயிர்களின் இடத்தில் பணப்பயிர்கள் ஆக்கிரமித்துவிட்டன. அதுவும் கூட விவசாயிகளை வாழவைப்பதாக இல்லை. பூக்களின் விலை உயர்வின் பின்னே உள்ள காரணம் இதுதான். மேலும் அழகு, நுகர்வு என்ற பெயரில் பூக்களை வைத்து மிகப்பெரிய நுகர்பொருள் சந்தை உருவாக்கப்பட்டிருக்கிறது.
அர்த்தமற்ற முறையில் இயற்கை வளமும், மனித வளமும் விரயமாக்கப்படுவதற்கு பூக்கள் ஒரு எடுப்பான உதாரணம். இந்தப் பொருளாதாப் பின்னணியோடு பெண்களை அழகு சாதனமாகவும், துய்த்தெறியும் பொருளாகவும் பார்க்கும் பண்பாட்டு காரணமும் இணைந்திருக்கிறது. அந்த வகையில் பூக்களின் மாய உலகிலிருந்து பெண்கள் வெளியேற வேண்டும்.
வாழ்த்துரை வழங்கச்செய்து பி.டி கத்திரிக்காய்க்கு மாபெரும் விளம்பரம் ஒன்றை செய்திருக்கிறது விவசாயப் பல்கலைக்கழகமும் அவர்களின் சமீபத்தைய குலசாமியான மான்சாண்டோவும். இதுவரை அப்துல் கலாமை உதாரணபுருஷனாக கொண்டிருந்து கொஞ்சம் சலித்துப்போயிருந்த மக்களின் புதிய கண்டுபிடிப்புதான் மயில்சாமி அண்ணாதுரை. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நான்கு பி.டி கத்திரிக்காய்களை கோவை வேளான் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்திருப்பதாக சொல்லியிருக்கிறார் ம.சா.அ.து. இதுவரை உள்ளூரில் விளைந்த கத்திரிக்காயால் சுற்றுப்புறத்திற்கு என்ன கேடு வந்துவிட்டது என்பது சத்தியமாக எனக்குப் புரியவில்லை. அதையும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளரை வைத்து சொல்லச் சொல்வதன் காரணம் என்ன ?? ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தத்திற்கு மார்கெட்டிங் செய்ய அப்துல் கலாமை அனுப்பினார்கள், இப்போது அண்ணாதுரையின் முறை.பி.டி கத்திரிக்காயின் நல்லதா கெட்டதா என விவாதிக்கும் முன் அதன் தேவையைப்பற்றி தெரிந்துகொள்வது முக்கியம். பெரிய அளவில் தட்டுப்பாடு வராத, பயிரிடப்படுவதிலும் ஒரு பெரிய முக்கியத்துவம் இல்லாத கத்திரிக்கு ( தங்கள் நிலத்தின் ஒரு பாகத்தில் மட்டுமே பெரும்பாலான விவசாயிகள் கத்திரியை பயிரிடுகிறார்கள் ) மரபணு மாற்றம் செய்வது என்பது ஒரு முன்னோட்டமே. அடுத்து வரப்போகும் மற்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கான தடைகளை இப்போதே கத்திரியை அனுப்பி ஆழம் பார்க்கிறார்கள். நமது கேனத்தனத்தினைப் பொறுத்து பி.டி நெல் உள்ளிட்ட மற்ற பயிர்கள் இன்னும் சுலபமாக உள்ளே நுழையும்.
இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு முதலில் பயன்பாட்டுக்கு வர இருப்பது கத்திரிக்காய்தான். பி.டி கத்திரிக்காய் உடலுக்கு ஏற்படுத்தும் கேடுகளைப்பற்றி ஆராயாமல் ஏதோ வீடு கட்டும் ஒப்புதலை வழங்குவதுபோல அதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்திருக்கிறது மத்திய மரபணுப் பொறியியல் ஒப்புதல் குழு ( genetic engineering approval committe ). கத்திரி மீதான ஆய்வு முடிவுகள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் அதன் பிறகு மக்களின் கருத்து கேட்கப்பட்ட பிறகே மத்திய அரசு முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் பல்வேறு விளைவுகள் பற்றி ஆய்வு செய்ய இந்தியாவில் வசதி இல்லை என்றும் உடனடியாக ஒரு ஆய்வகம் அமைக்கப்படவேண்டும் என மத்திய அரசை கோரியிருக்கிறார் புஷ்பா பார்கவா ( இவர் உச்ச நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட GEAC யின் பார்வையாளர் ). மத்திய அரசும் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறது. அப்படியானால் ஜெயராம் ரமேஷ் மக்களுக்குத் தரப்போவது எந்த ஆய்வறிக்கை என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.
உண்மையில் GEAC ஆய்வு என சொல்வது பி.டி கத்திரிக்காயை உருவாக்கிய மான்சாண்டோ செய்த ஆய்வைத்தான். அந்த ஆய்வு பத்து எலிகளைக் கொண்டு மூன்று மாதங்கள் மட்டும் நடைபெற்றது. இதில் நீண்டகால பாதிப்புகள் குறித்து எந்த தகவலை பெறமுடியும் ? முதலில் எலிகள் மீதும் பிறகு குரங்குகள் மீதும் ஆய்வுகள் செய்யப்படுவது வழக்கம். இப்போது இந்தியர்கள் கிடைத்துவிட்டதால் குரங்குகள் மீதான ஆய்வு தவிர்க்கப்பட்டு விட்டதுபோலும். விதைகளை மீண்டும் பயன்படுத்த முடியாமை, மகரந்த சேர்க்கை மூலம் மற்ற பயிர்களும் மலடாகும் போன்ற பிரச்சனைகள் பற்றி ஆய்வு செய்யும் சாத்தியம் இந்தியாவில் கண்ணுக்கெட்டியவரை கிடையாது. ரசாயன பூச்சிக்கொல்லிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் அவற்றின் ஆபத்துக்கள் பற்றி பெரிய தெளிவு மக்களிடம் கிடையாது அல்லது அவர்களுக்கு விளக்கம் தரப்படவில்லை. தாய்ப்பால் முதல் அண்டார்டிகா வரை பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு அறியப்பட்டபிறகும் அந்த விவரம் பெரும்பாலான பாமர மக்களுக்கு தெரியவில்லை. இதேகதைதான் பல ஆலைக்கழிவுகளின் விசயத்தில் இப்போதும் நடக்கிறது. இந்த லட்சணத்தில் மக்களிடம் கருத்து கேட்டு பி.டி கத்திரிக்காயை அனுமதிக்கப்போவதாக சொல்வது வேறு பயமுறுத்துகிறது.
இதன் இன்னொரு முகம் பொருளாதாரம் சார்ந்தது. விவசாயிகளை சகல வழிகளிலும் நிறுவனங்களை சார்ந்திருக்கச் செய்வது. ஏற்கனவே உரம் பூச்சி மருந்து என பல இடுபொருட்களுக்கு விவசாயிகள் அடிமையாக்கப்பட்டுவிட்டார்கள். விதைகளும் அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டால் தீர்ந்தது பிரச்சினை. எல்லா விவசாயியும் ஒப்பந்தப் பணியாளரைப்போல மாண்சான்டோவுக்கு வேலைசெய்ய வேண்டியதுதான். பி.டி பருத்தி விதைகள் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை 1750, அப்போது சாதாரண பருத்தி விதை முன்னூறு ரூபாய்கூட கிடையாது. அப்படி வாங்கியவர்களும் பெரிய மகசூல் எடுத்ததாக மான்சாண்டோவாலும்கூட நிரூபிக்க முடியவில்லை அவர்களின் உள்ளூர் எடுபிடிகளான வேளான் பல்கலை(ளை)க்கழகங்களாலும் நிரூபிக்க முடியவில்லை. பி.டி பருத்தியால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள். இப்போது கத்திரிக்காய் எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ தெரியாது. இது போதாதென்று இன்னும் ஐம்பத்தாறு பி.டி பயிர்கள் அறிமுகத்திற்காக காத்திருக்கின்றன.
விதை யார் கொடுத்தால் என்ன, கத்திரிக்காய் வழக்கம்போல கிடைக்கும்தானே என கேட்கவும் ஆட்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்க என்னிடமும் ஒரு கேள்வி உண்டு, உங்கள் பிள்ளை எங்கிருந்து வந்தால் என்ன ? அது உங்களுடையதாக இருக்க வேண்டுமென்று என்ன அவசியம் இருக்கிறது ?
விதைக்கான உரிமை பறிபோகும் வேளையில் விளைபொருளின் மீதான உரிமையையும் பறிக்க ஒரு சட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கரும்புக்கான நியாய ஆதரவு விலை அவசரச்சட்டம் என்பதுதான் அது. அதாவது இப்போது அமுலில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சுமார் முன்னூறு ரூபாய் குறைவான விலையை ஒரு டன்னுக்கு “அவசரமாக” நிர்ணயம் செய்யும் சட்டம்தான் இப்போது பிரச்சினையாகியிருக்கிறது. ஒரு விளைபொருளின் விலையை குறைப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர முயலும் ஒரே சாதனை அரசு இந்தியாவில்தான் இருக்கமுடியும். இத்தனைக்கும் கடந்த ஓராண்டில் மட்டும் சர்க்கரையின் சந்தை விலை கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது.ஒப்புக்குக்கூட எந்தவிதமான காரணமும் சொல்லாமல் விவசாயிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்பான ஒரு திட்டத்தை சட்டமாக கொண்டு வர முயற்சி செய்திருக்கிறது காங்கிரஸ்.
ஏற்கனவே எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி திட்டமிட்டு குறைக்கப்பட்டு இறக்குமதி நிரந்தரமாகிவிட்டது. அடுத்து கரும்பு இறக்குமதி துவங்கியாயிற்று ( கரும்பு உற்பத்திப் பரப்பு 48% குறைந்துவிட்டதாக ( அல்லது குறைக்கப்பட்டுவிட்டதாக) மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அடுத்து அரிசி இறக்குமதிக்கு சாக்குப்பையை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி. மேற்கூறிய எல்லா பொருட்களும் சமீப காலமாக கடுமையான விலையேற்றத்தை சந்தித்திருக்கின்றன. விவசாயிக்கும் விவசாயத்திற்கும் எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் மறுநாள் பாதிக்கப்போவது சாதாரண நுகர்வோரான இந்தியக் குடிமகனைத்தான். மன்மோகனும், மாண்டெக் சிங்கும் இந்தியாவை பணம் படைத்தோருக்கு மட்டுமான ஒரு தேசமாக மாற்றும் வரை ஓயப்போவதில்லை. அதுவரை நம்மை திசைதிருப்ப இருக்கவே இருக்கிறது பாகிஸ்தான் தீவிரவாதம். அதுசரி செத்தாலும் உள்ளூர்காரனால் சாவதுதானே தேசபக்தி.
கரும்பு விலை சட்டத்தின் மூலம் நமக்கு இன்னொரு முக்கியமான பாடம் கிடைத்திருக்கிறது. டில்லியை ஒருநாள் முற்றுகையிட்டாலே ஒரு அராஜகமான சட்டத்தை நிறுத்த முடியும் என்பதுதான் அது.
விவசாயத்துடன் கறிக்கோழி வளர்ப்பை ஒரு துணைத்தொழிலாக மேற்கொண்டு வந்த தமிழக விவசாயிகள், கடந்த இரு மாத காலமாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலுள்ள கறிக்கோழி உற்பத்தி செய்யும் விவசாயிகள், இறந்த கோழிகளை சுகுணா நிறுவனத்தின் முன்பாகப் போட்டு, அந்நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று பல்லாயிரக்கணக்கான கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகள் தமது 10 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். ஏறத்தாழ 2 இலட்சம் விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழகத்தில் இப்போராட்டம் தற்போது ஓய்ந்திருப்பதைப் போலத் தோன்றினாலும், அது நீறுபூத்த நெருப்பாகவே நீடிக்கிறது.
1980-களின் நடுவில் அரசின் கோழி ஆராய்ச்சி நிறுவனங்கள் கறிக்கோழி வளர்ப்பை விவசாயிகளிடம் அறிமுப்படுத்தின. அரசின் கோழிக் குஞ்சு உற்பத்தி நிறுவனங்களிடம் நேரடியாகக் குஞ்சுகளை வாங்கி 100 முதல் 1000 கோழிகள் வரை கொண்ட சிறிய பண்ணைகளை உருவாக்கி, தமிழகத்தில் பல்லடம், பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, வேலூர் முதலான பகுதிகளில் விவசாயிகளால் கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டன. வளர்ந்த கோழிகளை விவசாயிகளிடமிருந்து கறிக்கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் நேரடியாக வாங்கிக்கொண்டனர். இதே காலத்தில் அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் துணை நிறுவனமான தமிழ்நாடு கோழி வளர்ச்சி கழகம் (டாப்கோ-TAPCO) கோழி வளர்ப்பை ஊக்கப்படுத்தி ஆதரவளித்தது.
ஆனால் 1990-களில் தனியார்மய-தாராளமயக் கொள்கை திணிக்கப்பட்ட பிறகு, அரசுக்கு கோழி வளர்ப்பில் என்ன வேலை என உலகவங்கி உருட்டி மிரட்டத் தொடங்கியதும், உலக வங்கியின் கட்டளைப்படி, நிதி ஒதுக்கீட்டை அரசு நிறுத்தியதால் விவசாயிகளுக்குத் தேவையான குஞ்சுகளை அரசு நிறுவனங்கள் உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை. அரசு திட்டமிட்டே, அரசு நிறுவனங்களை ஒழித்தது. இலட்சக்கணக்கில் எந்திர சாதனங்களுக்குச் செலவாகும் என்பதால், கறிக்கோழி குஞ்சுகளை விவசாயிகளால் உற்பத்தி செய்யவும் முடியாது. இதன் விளைவாக, தனியார் கோழிக்குஞ்சு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் கறிக்கோழி வியாபாரத்தில் ஈடுபட்ட தனியார் பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் கை ஓங்க ஆரம்பித்தது. கோழிக்குஞ்சுகளுக்காக தனியார் நிறுவனங்களை விவசாயிகள் முற்றாகச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. மேலும், விவசாயத்தில் ஏற்பட்ட நெருக்கடியினால் விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்புத் தொழிலைக் கைவிட இயலாத நிலைமையையும், கறிக்கோழி வளர்ப்புக் கொட்டகைக்கான விவசாயிகளின் கடன் சுமையையும் பயன்படுத்திக் கொண்டு தனியார் கறிக்கோழி நிறுவனங்கள் ஒப்பந்த விவசாயத்தை விவசாயிகள் மீது திணித்தன.
கறிக்கோழி ஒப்பந்த விவசாயத்தில், ஒப்பந்த விவசாயத்தை நடத்தும் நிறுவனம் கோழிக் குஞ்சு, தீவனம், மருந்து மற்றும் மருத்துவ சேவையுடன் ஆலோசனைகளையும் கொடுக்கும். கோழிக் குஞ்சு வளர்ப்பிற்கான கொட்டகை, குடிநீர், மின்சாரம் மற்றும் உழைப்பைக் கொண்டு கறிக்கோழிகளை விவசாயிகள் வளர்க்க வேண்டும். ஒப்பந்த நிறுவனம் விவசாயிகளுக்கு வளர்ப்புக் கூலியைக் (உயிருள்ள கோழிக்கு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ. 1.50 முதல் அதிகபட்சமாக 2.50 வரை) கொடுத்துவிட்டு கோழிகளைக் கொள்முதல் செய்து கொள்ளும். இந்த ஒப்பந்த விவசாயத்தை வெங்கடேஸ்வரா, பயனீர், சாந்தி பார்சூன், சுகுணா போன்று 20-க்கும் மேற்பட்ட தனியார் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் தொடக்க காலத்தில் 500, 1000 கோழிகளை வளர்க்க ஒப்பந்தம் போட்டு விவசாயிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. அடுத்ததாக, குறைந்த பட்சமாக 5000 கறிக்கோழிகள் வளர்க்க வேண்டும் என்று நிபந்தனை போட்டும், நிறுவனத்தினர் சொல்லும் விதத்தில் கொட்டகை அமைத்துப் பராமரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டும் பல லட்சங்கள் முதலீடு செய்ய வாய்ப்பில்லாத சிறு விவசாயிகளை வெளியேற்றின. இன்னொருபக்கம் கறிக் கோழி வியாபாரத்தில் ஈடுபடும் பெரும் வியாபாரிகளுக்குப் பல சலுகைகள் கொடுத்து தன் பிடியில் கொண்டு வந்து ஏகபோகத்தை நிறுவியுள்ளன.
மேலும் இந்நிறுவனங்கள், கறிக்கோழி ஒருங்கிணைப்புக் கமிட்டி (Broiler Co-ordination Committee -BCC) என்ற கூட்டமைப்பை உருவாக்கி தன்னிச்சையாக கறிக்கோழியின் விலையைத் தீர்மானிக்கின்றன. இந்தக் கூட்டமைப்பு அவ்வப்பொழுது அறிவிக்கும் கறிக்கோழிக்கான பண்ணை விலை என்பது விவசாயிகளுக்குக் கொடுக்கும் விலை அல்ல; விவசாயிகளுக்கு கோழி வளர்ப்புக்கான கூலி மட்டும்தான் கொடுக்கப்படுகிறது. இந்தக் கமிட்டி அறிவிக்கும் பண்ணை விலையை அடிப்படையாகக் கொண்டுதான் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகள் நுகர்வோருக்கான கறிக்கோழி விலையைத் தீர்மானிக்கின்றனர்.
இப்படிச் செயல்படும் ஏகபோக நிறுவனங்களில் ஒன்றுதான், சுகுணா. இது, கோயம்புத்துரை தலமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இன்று இந்நிறுவனம் 11 மாநிலங்களில் 8,000 கிராமங்களில் சுமார் 20,000 விவசாயிகளிடம் கறிகோழி ஒப்பந்த விவசாயத்தை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் நேரடியான சில்லறை விற்பனை இறைச்சிக் கடைகளை (சுகுணா டெய்லி ஃபிரஷ்) திறந்து வருகிறது. ஒப்பந்த விவசாயத்தின் மூலம் வாரம் ஒன்றுக்கு 80 லட்சம் கறிக்கோழிகளைச் சந்தைக்குக் கொண்டு வரும் இந்நிறுவனத்தின் ஆண்டு வர்த்தகம் 3200 கோடி ரூபாய்களாகும். ஒப்பந்த விவசாயிகளை ஒட்டச் சுரண்டி, உலகின் கறிக்கோழி வர்த்தகத்தில் 10 வது இடத்தைப் பிடித்துள்ள இந்நிறுவனம், நாட்டின் 20 சதவீத நுகர்வுச் சந்தையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.,
கோழி உட்கொள்ளும் தீவனம் மற்றும் அதன் எடை வளர்ச்சியின் அடிப்படையில்தான் விவசாயிகளுக்கு வளர்ப்புக் கூலி கொடுக்கப்படுகிறது. அதாவது, ஒரு கோழி 4 கிலோ தீனி தின்று 40-45 நாட்களுக்குள் 2 கிலோ ஏறினால் அதிகபட்சமாக ரூ 5.00 (கிலோவுக்கு 2.50 ரூ என்ற வீதத்தில் ) கூலியா கொடுக்கப்படுகிறது. ஆனால், கறிக்கோழியின் எடை அதிகரிக்க ஒரு கிலோவுக்கு ஏறத்தாழ ரூ.6.00 வரை விவசாயிகள் செலவு செய்ய வேண்டியுள்ளது. விலைவாசியோ பல மடங்கு அதிகரித்துள்ள போதிலும், கடந்த பல ஆண்டுகளாக கோழி வளர்ப்போருக்கு இவ்வளவுதான் கூலியாகத் தரப்படுகிறது. இப்படி அற்பக்கூலி கொடுத்துச் சுரண்டும் சுகுணா நிறுவனம், கறிக்கோழிகளை கிலோ ரூ.130 வரை விற்று கொள்ளை லாபத்தைச் சுருட்டுகிறது.
பொதுவாக கறிக்கோழி உற்பத்தியில் குஞ்சுகளின் தரம், தீவனத்தின் தன்மை மற்றும் மருத்துவச் சேவைகள் ஆகியவைகளே கோழியின் வளர்ச்சியைப் பிரதானமாக தீர்மானிக்கின்றன. இவையனைத்தும் சுகுணா போன்ற ஒப்பந்த விவசாய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. விவசாயிகளின் கட்டுப்பாட்டில் வெறும் கோழிக் கொட்டகை, குடிநீர், தினசரி பராமரிப்பு நடவடிக்கைகள் மற்றும் அவர்களது உழைப்பு மட்டுமே இருக்கிறது. கறிக்கோழி உற்பத்தியில் ஒரு நாள் வயது உள்ள தரமான கோழிக்குஞ்சு 50 கிராம் இருந்தால்தான் சீக்கிரம் எடை கூடும். ஆனால் 38 கிராம் எடை கொண்ட சுகுணா நிறுவனத்தின் குஞ்சுகள் தரமற்றவை. சுகுணா நிறுவனத்தின் தீவனத்தின் தரத்தைப் பொருத்த வரையில், இடுபொருட்களின் விலைக்கு ஏற்பவும், கறியின் விலைக்கு ஏற்பவும் தரம் மாறுபடுகிறது. உதாரணமாக, பறவைக் காச்சல் நோய் பரவி கோழிக்கறி விலை சரிந்தபோது, கோழிகளுக்கு தரம் தாழ்ந்த தீவனத்தை கொடுத்து தன் நட்டத்தை சுகுணா நிறுவனம் குறைத்துக் கொண்டது. கோழிகள் தீவனத்தை தின்றும்கூட எடை ஏறவில்லை. இதன் ஊடாக ஒட்டு மொத்த நட்டத்தையும் விவசாயிகளின் தலையில் அந்நிறுவனம் சுமத்தியது. வேறு காரணங்களால் சந்தை வீழ்ச்சியடையும் நேரங்களில், கோழிகளைக் காலம் தாழ்த்தி கொள்முதல் செய்வதன் மூலமாக இந்நிறுவனம் நட்டத்தை விவசாயிகளின் பக்கம் தள்ளுகிறது.
இன்னொரு பக்கம், சந்தை ஏறுமுகமா இருக்கும் காலகட்டத்தைக் கணக்கில் கொண்டுதான் அதற்கேற்ப இந்நிறுவனம் விவசாயிகளுக்குக் கோழிக்குஞ்சுகளைக் கொடுக்கிறது. குறிப்பாக, கறிக்கோழி வியாபாரம் இறங்குமுகமாக உள்ள புரட்டாசி மாதம் மற்றும் கோடைக் காலங்களில் இந்நிறுவனத்தால் கோழி உற்பத்தி திட்டமிட்டு நிறுத்தப்படுகிறது. 5000 கோழிகளுக்கு குறைந்த பட்சம் 4 முதல் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள கொட்டகையைக் கடன் வாங்கி உருவாக்கிய விவசாயிகள், இப்படி பல மாதங்கள் கோழிகள் இல்லாமலே வெறுமனே கொட்டகை கிடப்பதால் பெருத்த நட்டத்தைச் சந்திக்கின்றனர். நட்டம் முழுவதும் விவசாயிக்கு; இலாபம் முழுவதும் சுகுணாவுக்கு. இந்த அநியாயத்தை எதிர்த்துக் கேட்காமல் இருக்க வெற்று பத்திரங்களிலும், காசோலைகளிலும் கையெழுத்து வாங்கி விவசாயிகளை இந்நிறுவனம் அறிவிக்கப்படாத கொத்தடிமைகளாக வைத்திருக்கிறது. இப்படி விவசாயிகள் நட்டப்பட்டு கறிக்கோழிகளை வளர்த்து சந்தைக்கு வருவதுதான் “சுகுணா சிக்கன்’’! விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டி உருவானதுதான் சுகுணாவின் “இளசான, மிருதுவான, தரமான சிக்கன்’’!
நீண்ட காலமாகக் குமுறிக் கொண்டிருந்த ஒப்பந்த விவசாயிகள், வளர்ப்பு கூலியா உயிருள்ள கறிக்கோழியின் எடைக்கு ஏற்ப கிலோவுக்கு குறைந்த பட்சமாக 3.50 ரூபாயும், 50 கிராம் எடை கொண்ட குஞ்சு, தரமான தீவனம், மருத்துவ சேவைகள், ஆலோசனைகள் மற்றும் முழுமையாக கொட்டகையைப் பயன்படுத்துவதற்குத் தொடர்ச்சியாகக் கறிக்கோழிக் குஞ்சுகளைக் கொடுக்கவேண்டும் எனவும்; வெற்றுப் பத்திரங்களிலும், காசோலைகளிலும் கையெழுத்து வாங்கி மிரட்டுவதை நிறுத்தக் கோரியும் சுகுணா நிறுவனத்துக்கு எதிராகப் போராடினர். சுகுணா நிறுவனமோ பேச்சுவார்த்தைக்கு வரமுடியாது, கோரிக்கைகளை நிறைவேற்றவும் முடியாது என்று திமிராக அலட்சியப்படுத்தியது. அரசோ கண்டும் காணாமலும் இருந்தது. விவசாயிகள் கோழிகளை பட்டினி போட்டு, இறந்த கோழிகளை சுகுணா அலுவலகத்தின் முன் கொட்டிய பிறகுதான், அதிர்ச்சியடைந்த அந்நிறுவனம் பேச்சு வார்த்தைக்கு வந்தது. சுகுணாவின் அடாவடித்தனத்தை எதிர்க்க வக்கற்ற அரசோ பேச்சுவார்த்தையில் நடுநிலை நாடகமாடியது. இறுதியில் சுகுணா நிறுவனம், உயிருள்ள கோழிக்கு எடைக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு வளர்ப்புக் கூலியாக ரூ.3.50 தருவதாக ஒப்பு கொண்டதால் தற்காலிகமாகப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. ஆனால் இன்று வரை சுகுணா, பேச்சுவார்த்தையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை. போராடுகிற பகுதிகளில் இருக்கும் விவசாயிகளுக்குக் கறிக்கோழிக் குஞ்சுகள் கொடுப்பதையும் நிறுத்தியுள்ளது. மேலும் போராடும் விவசாயிகளை ஓரணியில் திரள விடாமல் பிரித்தாளும் சதிவேலைகளைச் செய்து வருகிறது.
தனியார்மய-தாராளமயக் கொள்கை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதால் தமிழக அரசோ, கால்நடை பராமரிப்புத் துறையோ அல்லது கால்நடை மருத்துவ பல்கலைக்கழகமோ கறிக்கோழி ஒப்பந்த விவசாய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் சூழலில் இல்லை. ஒப்பந்த விவசாயத்தில் பங்கேற்கும் விவசாயிகளின் பாதுகாப்பிற்காக எந்த ஒரு குறிப்பிட்ட சட்ட வரையறையும் இல்லை. இதுதான் பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்படும் ஒப்பந்த விவசாயத்தின் யோக்கியதை!
கூலி உழைப்பாளிகளை மட்டுமின்றி சிறு உடமையாளர்களையும் சுரண்டிக் கொழுத்து ஏகபோகத்தை நிறுவுவதுதான் முதலாளித்துவம். விவசாயம் நசிந்து போனதால், வேறுவழியின்றி கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்ட சிறு விவசாயிகளின் நிலம், நீர், உழைப்பைச் சுரண்டி போண்டியாக்கிவிட்டு, அவர்களைத் தற்கொலைப் பாதைக்குத் தள்ளுவதான் ஒப்பந்த விவசாயத்தின் நோக்கம் என்பதை சுகுணா நிறுவனத்துக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நிரூபித்துக் காட்டிவிட்டது. இந்நிலையில், ஒப்பந்த விவசாயத்துக்கு அரசின் பாதுகாப்பைக் கோரும் போராட்டங்களோடு, தனியார்மய-தாராளமயத் தாக்குதலுக்கு எதிராக இதர பிரிவு உழைக்கும் மக்களுடன் ஓரணியில் திரண்டு போராடுவதன் மூலம்தான், ஏகபோக கோழிப்பண்ணை நிறுவனங்களின் இரும்புப் பிடியிலிருந்து கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகள் விடுபட முடியும்.
தொடங்கி விவசாயிகள் உரிமைக்கு போராடுவோரை நக்சலைட்டுக்கள் என பரப்புரை செய்வது வரை தினமலரது திருப்பணிகளின் கணக்கிலடங்காதவை. தங்களின் வாசகர்களின் பெரும் சதவீதமானவர்களாக உள்ள அரசு ஊழியர்களின் போராட்டத்தை அவதூறு செய்து நன்றியுணர்ச்சிக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் இவர்கள், முன்னாள் இலங்கை துணைத்தூதர் அம்சாவை பெருந்தன்மையானவர் என சொன்ன ஒரே தமிழ் ஊடகம் தினமலர்தான். மேற்கூறிய பிரிவினருக்கு எல்லாம் தினமலர் தங்களுக்கு எதிரானது என்பது தெரியும். ஆனால் பெரும்பாலான தாழ்த்தப்பாட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு தினமலர் தங்களுக்கும் எதிரி என்பது தெரிவதில்லை. அதன் இந்துத்துவா முகம் எல்லா இந்துக்களுக்கும் ஆதரவான பத்திரிக்கையைப்போல ஒரு மாயத்தோற்றத்தை தோற்றுவிக்கிறது. மதமாற்றம் பற்றி ஓலமிடும் செய்திகள், இந்து அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கு தரப்படும் அதீத முக்கியத்துவம், நிறைந்து வழியும் கோயில் குளம் பற்றிய செய்திகள் என்பன போன்ற செயல்களால் இது இந்துக்களுக்கான பத்திரிக்கையாக பலருக்கும் தோண்றுகிறது.
உண்மையில் அதன் பார்ப்பன சிந்தனை வாரமலர் கதைகளில்கூட பிரதிபலிக்கிறது. டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி ஒன்று வாரமலரில் நடத்தப்படுகிறது. அதில் சாதிக்கொடுமை, இடஒதுக்கீடு பற்றி வந்த மூன்று கதைகளின் சுருக்கத்தை மட்டும் பாருங்கள்.
1. இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு குடும்பத்தின் வாரிசுகள் இடஒதுக்கீடு பற்றி தங்கள் குடும்ப நண்பர் ஒருவருடன் விவாதிக்கிறார்கள் (மதிப்பெண் எதிர்பார்த்த அளவு வராவிட்டாலும் தனக்கு இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என ஒரு வாரிசு சொல்வதில் இருந்து விவாதம் துவங்குகிறது ) .குடும்ப நண்பரோ தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காக அரசு இடஒதுக்கீட்டை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழங்கி வருவதாகவும், இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு தலைமுறை தங்கள் வாரிசுகளையும் அந்த ஒதுக்கீட்டில் பலனடைய வைப்பதால் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போவதாகவும் கவலைப்படுகிறார். உடனே மனம் திருந்துகிறார்கள் அந்த இளைஞர்கள். அந்த குடும்பத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர் தான் இடஒதுக்கீட்டை நாடாமல் பொதுப்பிரிவில் என்ன படிப்பு கிடைக்குமோ அதை படிக்கப்போவதாக சொல்வதுடன் கதை சுபமாக முடிகிறது. ( சென்ற ஆண்டில் முதல் பரிசு பெற்ற கதை )
2. ஒரு கிராமப்பள்ளியில் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களை தொடர்ந்து கழிவறையை சுத்தம் செய்ய சொல்கிறார்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் தங்கள் வீட்டில் இது பற்றி முறையிடுகிறார்கள். பெற்றோர்கள் திரண்டு சென்று ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்கிறார்கள். மாணவர்கள் படிப்பு பாழாகிவிடுமோ என அஞ்சி பதில் நடவடிக்கையை ஊருக்கு போய் முடிவு செய்யலாமென பெற்றோர்கள் திரும்புகிறார்கள். மறுநாள் தலைமை ஆசிரியர் தங்கள் அலுவலகத்தை திறக்கும்போது சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. எல்லா வகுப்பறைகளும் இதே மாதிரி அசிங்கம் செய்யப்பட்டிருப்பதாக மற்ற ஆசிரியர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். இதை யார் செய்து இருப்பார்கள் என யூகித்த தலைமை ஆசிரியர் காவல்துறைக்கு தகவல் சொல்ல கிளம்புகிறார். முந்தைய நாட்களில் கழிவறையை சுத்தம் செய்யும்படி நிர்பந்திக்கப்பட்ட மாணவர்கள் தானாகவே முன்வந்து தாங்களே பள்ளியை சுத்தம் செய்வதாக சொல்கிறார்கள். பிறகு ( இளகிய மனம் படைத்தவர்கள் கண்களை துடத்துக்கொள்ளத்தயாராய் இருக்கவும் ) இந்த செயலால் மனம் திருந்திய தலைமையாசிரியர் அவர்களை இனி இந்த வேலையை செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு, பள்ளியை சுத்தம் செய்ய ஆட்களை அழைத்துவருமாறு தமது ஊழியரை பணிக்கிறார். ( இந்த ஆண்டு இரண்டாம் பரிசு )
3. ஒரு கிராமத்தின் சலவைத்தொழிலாளியின் குடும்பம் ஒன்றில் தன் மகளை சலவைத்துணி வாங்கி வருமாறு பணிக்கிறாள் தாய். சலித்தபடியே துணி வாங்கச்செல்லும் மகள் ( பள்ளியிறுதி மாணவி ) வழியில் தங்கள் மீதான ஒடுக்குமுறையை பற்றி சிந்தித்தபடி செல்கிறார். துணி வாங்கும் வீட்டிலும் அவள் சுயமரியாதையை பாதிக்கும் செயல்கள் நடக்கின்றன. ( சலவைகாரப்பெண்னை வெறும் கையோடு அனுப்பாமல் ஏதாவது பட்சணம் கொடுத்தனுப்பு என்று ஒரு பெண் சொல்வதையும் மீதமான உணவை தங்கள் தலையில் கட்டும் தந்திரம் என சரியாக கணிக்கிறாள் அப்பெண் ). வீட்டிற்கு திரும்பியவளிடம் அவள் அம்மா, இன்று உன் அத்தை உன்னை பெண் பார்க்க வருவதாக சொல்கிறார். மனவளர்ச்சியில்லாத அத்தை மகனை மணக்க விரும்பாமல் தான் விரும்பிய இளைஞனை ( அவ்வூரில் பிணம் எரிக்கிறார் அவர் ) மணந்து அந்த ஊரிலேயே வசிக்கிறார் அப்பெண். கதையின் துவக்கத்தில் குறிப்பிட்ட அவளது வாழ்வியல் சிரமங்களைப்பற்றி மேலதிக தகவல்கள் இல்லாமல் முடிகிறது கதை. ( இவ்வாண்டு பிரசுரத்திற்கு தேர்வான ஆறுதல் பரிசுக்கதை
பரிசுக்கதைகளை கவனியுங்கள். ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட கதை நாயகர்கள் யாரும் தங்களுக்கான நியாயத்தை உரத்துக்கூட கேட்கவில்லை. ஒரு முறைக்கு மேல் இட ஒதுக்கீடு எதற்கு ? என்று தினமலரின் கருத்தை சொல்வதால்தான் இந்த கதை பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. மற்ற கதைகளும் விதித்ததை ஏற்றுக்கொள் என நமக்கு பாடம் நடத்துகிறது. கதையை கதையாக மட்டும் பார் என அறிவுரை சொல்லும் ஆட்களை செருப்பால் அடிப்பதுபோல ஒரு கருத்தை சொல்லி தான் யார் என்பதை காட்டியது தினமலர். நவம்பர் எட்டாம் தேதி வாரமலரின் ஞானாந்தம் பகுதியில் ” எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். அவரை போட்டால் துவரை முளைக்குமா ? ” என நேரடியாக மனுதர்ம விஷத்தை கக்குகிறது தினமலர். அதை விளக்க வைரம் ராஜகோபால் சொன்ன ஒரு கதையின் சுருக்கம் கீழே,
ஒரு ஞானியை கைது செய்கிறான் ஒரு அரசன் ( அவர் பிச்சையெடுத்த குற்றத்திற்காக ) . அவர் ஒரு பெரிய ஞானி என அறிந்து அவரிடம் பல விசயங்களைக்கேட்டு தெளிவு பெறுகிறான். அவர் தன் அறிவை நிரூபிக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கு பிறகும் கூடுதலாக ஒரு பட்டை சாதம் தினமும் தர உத்தரவிடுகிறான் அரசன். ஒருநாள் அரசன் தான் எப்படிப்பட்டவன் என சொல்லும்படி ஞானியிடம் கேட்கிறான். ஞானியோ தயங்கியபடி நீங்கள் ஒரு சமயல்காரனுக்கு பிறந்தவர்.. ராஜாவுக்கு பிறந்தவரல்ல என்கிறார். இதை தன் தாயிடம் கேட்கிறான் அரசன், தாயும் நீ சமையல்காரனுக்குப் பிறந்தவன்தான் என ஒப்புக்கொள்கிறார். அந்த ஞானியிடம் இதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என கேட்கிறான் அரசன். நீ ராஜகுலத்தில் பிறந்தவனெனில் எனக்கு பொன்னையும் பொருளையும் தரச்சொல்லியிருப்பாய், சமையல்காரனுக்கு பிறந்தவன் என்பதால் பட்டை சாதம் தர சொன்னாய் என்கிறார் ஞானி. ( சில விதிவிலக்குகள் இருக்கலாம் எனவும் சொல்கிறார் வைரம்- ஜெயேந்திரனை பார்த்துவிட்டு எல்லா பிராமணனும் ஸ்த்ரீ லோலனோ என நாம் நினைத்துவிடக்கூடாதில்லையா?? )
இந்து ஆதரவு எனும் போர்வையில் தனது பார்பன சிந்தனையை வாசகர்களுக்குள் திணிக்கிறது தினமலர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. தினமலரின் நீண்டகால வாசகர்கள் பலர் ‘ இனியும் இடஒதுக்கீடு எதற்கு, திறமைக்கு முன்னுரிமை தரவேண்டும் சாதிக்கு அல்ல, சாதீய வேறுபாடுகள் மறைந்துவிட்டதால் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்பவருக்கு இடஒதுக்கீடு கொடு’ எனபன போன்ற சிந்தனையோட்டத்தில் இருப்பதைக்காண முடிகிறது.
தான் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண் என புதியவர்களுடன் அறிமுகமாகும்போதே சொல்லிவிடுவேன் என்கிறார் என் தோழி ஒருவர் ( பிற்பாடு தெரிந்துகொண்டால் பழகுவதில் வேறுபாடு காட்டுவார்களோ என அஞ்சி ). தாழ்த்தப்பட்டவர் என சுலபமாக அடையாளம் காட்டும் தன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார் நான் அறிந்த ஒரு பொறியியல் பட்டதாரி. இவை எல்லாம் எங்கோ ஒரு மூலையில் நடப்பவை அல்ல, தொழில் நகரமான கோவையில் நடந்தவை. தனிக்குவளை போய் டிஸ்போசபிள் கப் வந்ததுதான் சாதிவேறுபாட்டை களைவதில் நாம் கண்ட முன்னேற்றம். கிராமப்பகுதிகளில் முரட்டுத்தனமாக வெளிப்படும் ஜாதீயம் நகர் பகுதிகளில் நாசூக்கான வழிகளில் வெளிப்படுகிறது அவ்வளவுதான்.
இந்த வெளிப்பூச்சு சமத்துவத்தை இடஒதுக்கீட்டிற்கு எதிரான ஆயுதமாக்கும் தினமலர்தான் பக்தியின் பின்னால் நின்று வர்ண வேறுபாட்டை நியாயப்படுத்துகிறது. பாம்பையும் பார்பானையும் கண்டால் பார்பானை முதலில் அடி என்றார் பெரியார், அப்போது எத்தனை பிராமணர்கள் தாக்கப்பட்டார்கள் ?? ஆனால் பசு ஒரு தெய்வம் என செய்யப்பட்ட பிரச்சாரத்தால் செத்த மாட்டை அறுத்த தலித்துகள் எரித்துக்கொல்லப்பட்டார்கள் வடக்கே. வார்த்தைகளின் பின்னால் இருப்பவனின் நோக்கம்தான் பின்பற்றுபவனின் செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது. ராஜராஜனுக்கு பிறகு வந்த சோழ அரசர்கள் பிராமணரல்லாத மக்களை படிப்படியாக தஞ்சை நகரை விட்டு வெளியேற்றினார்கள், இது வரலாறு. இதற்காக யாரும் சமகால பிராமணரிடம் வாக்குவாதம் செய்தால் அது நியாயமில்லை என்று சொல்லலாம். ஆனால் இன்றைக்கும் எம் மக்களையும் எங்கள் மொழியையும் வழிபாட்டில் தொடங்கி இசை வரை ஒதுக்கிவைக்கும் வழக்கத்தை என்ன செய்வது ? போராடு என்றனர் பெரியாரும் அம்பேத்கரும், அடுத்த ஜென்மம் வரை காத்திரு என்கிறது தினமலர்.
I.I.T. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ” இரண்டாயிரம் ஆண்டு காத்திருந்தவர்களால் ஒரு வருடம் காத்திருக்கமுடியாதா” என ஒரு நீதிபதியை கேட்க வைத்தது எது ?. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடந்தபோது மீனாட்சி செத்துவிட்டாள் எனக்கூறி அர்ச்சகர்களை வெளிநடப்பு செய்யவைத்தது எது?. சிறீரங்கம் உஷாவைத்தவிர மற்ற எல்லா சௌபாக்கியங்களும் சிறையில் ஜெயேந்திரனுக்கு தரப்பட்டது. தன்னை எதிர்த்தவனை கொல்ல சூத்திரனை நியமித்த ஜெயேந்திரன் சிறையில் தனக்கு சமைக்க மட்டும் பிராமணனை நியமிக்க சொன்னது ஏன் ? எல்லோரும் சமமென்றாகிவிட்டபிறகு ( தினமலர் கணிப்பின்படி) அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை தடுப்பது எது ? கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவரானபொழுது திருப்பதி தேவஸ்தானம் இனி தாங்கள் விரும்புபவர்களுக்கு மட்டும்தான் முதல் மரியாதை தருவோம் என முடிவெடுத்த திமிரின் அடித்தளம் எங்கிருக்கிறது ?
தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தினமலர் வாசகர்கள் அல்லது தினமலரது கருத்துடன் உடன்படுபவர்கள் மேலே உள்ள கேள்விகளுக்கு விடைகாண முற்படுங்கள். அதுதான் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான முதல் படி. அதைவிட்டுவிட்டு வாரமரலரின் கதை நாயகர்களைப்போல கையைக்கட்டிக்கொண்டு நானே கக்கூசை கழுவுறேன் சாமி என்றால் நம் பிள்ளைகளுக்கும் துடைப்பம்தான் மிஞ்சும்.
வெளியிட்டது தினமலர். தொடர்ந்து செய்தித்தாள் படிப்பவர்களுக்கு இந்த செய்தி புதியதாக இருக்காது, செய்தியில் உள்ள புதிய தகவல் அவர்தம் கட்டணவிவரம்தான். பெயரை மட்டும் குறிப்பிடாமல் இந்த செய்தி எல்லா பத்திரிக்கைகளிலும் வந்தபடிதான் இருக்கிறது. ஸ்ரீபிரியா தன்னை ஒரு நடிகர் ஏமாற்றியதற்காக தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தபோது பாராமுகமாய் இருந்துவிட்டதைப்போல இன்னொரு வரலாற்றுத் தவறை செய்துவிடக்கூடாது என முடிவு செய்துவிட்ட நடிகர்சங்கம் உடனடியாக உலக நாயகன்.. மன்னிக்கவும் உலக சாதனையாளர், முதல்வர் கலைஞரை சந்தித்தார்கள். திரௌபதிக்கு சேலை கொடுத்த கிருஷ்ண பரமாத்மாவைப்போல நவயுக திரௌபதிகளுக்கு வன்கொடுமை சட்டத்தைத்தந்து அருள்பாலித்தார் கருணாநிதி.
சத்துணவு பணியாளர்கள் மாதக்கணக்கில் போராடியும் பார்க்க முடியாத முதல்வருக்கு நடிகர்களுக்கென ஒதுக்க எப்போதும் நேரமிருக்கிறது. அவர்கள் முறையிட்டவுடன் தினமலர் செய்தியாசிரியர் கைது செய்யப்படுகிறார். நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு ஷகிலா உள்ளிட்ட நடிகர் நடிகைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் அவர் தவறவில்லை.
இதனிடையே நடந்த நடிகர்சங்க கூட்டத்தில் தங்கள் சுயரூபத்தை காட்டினார்கள் நடிகர்கள். அவர்கள் பேசியதைப்பார்த்தால் மறுநாள் தினமலர் பத்திரிக்கையே இருக்காதோ என சந்தேகம் பலருக்கு வந்திருக்கும். ஒரு விருதுக்காக ஊரையே எழுதித்தரும் பட்டத்துராஜா ஒருவர் கூப்பிடுதூரத்தில் இருக்கும்போது அவர்களுக்கு அப்படிச்செய்ய அவசியமிருக்காது.
ஜூன் மாதம் ஆனந்த விகடனுக்கு தான் அளித்த பேட்டியில் இலங்கைப் பிரச்சினையை பற்றி ‘ஆஃப் த ரெக்கார்ட்’ ஆக தன் கருத்துக்களை கவனமாக பேசிய சத்யராஜ் இந்த முறை அப்படியெல்லாம் பயப்படவில்லை, தினமலர் பொறுப்பாசிரியர் ஒரு வேசிமகன் என யாரெல்லாம் ஒத்துக்கொள்கிறீர்கள் என் கேள்வி எழுப்பினார். வேசிமகனுகான அடையாளங்களை சுலபமாக கண்டறியும் திறன் கொண்ட திரையுலகம் ஒட்டுமொத்தமாக கை உயர்த்தியது.
தான் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய எந்திரம் செய்யும்படி சொல்லும் காட்சி வைத்ததால்தான் சென்னை மாநகராட்சி அப்படி ஒரு கருவி வாங்கியதாக உளறிய விவேக் எனும் கோமாளி இன்னும் ஒருபடி மேலே போய் பத்திரிக்கையாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம் கேட்டார். சாதாரணமாகவே நடிகைகளை உள்ளடையுடன் ஆடவிடும் துறையில் இருப்பவரின் புத்தி பத்திரிக்கையாளர்களின் குடும்ப பெண்களுக்கு கிராபிக்ஸில் உள்ளாடை அணிவிக்கும் வகையில் சிந்திப்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
நடிகர்கள் உணர்ச்சிவயப்பட்டெல்லாம் அப்படிப்பேசவில்லை, அவர்கள் இயல்பே அப்படிதான் இல்லாவிட்டால் சக நடிகனுக்கு தனது படத்து வசனத்தின் மூலம் சவால் விட மாட்டார்கள். நடிகர்களின் யோக்கியதை மக்கள் எல்லோரும் அறிந்ததுதான், தாம் எவ்வளவு தூரம் கேவலமானவர்கள் என மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாக இந்த கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டார்கள். தனது கட் அவுட்டுக்கு தன் செலவில் ( அல்லது தன் அப்பா செலவில்) பாலாபிசேகம் செய்யும் இவர்கள் நியாயமான முறையில் கோரிக்கை வைக்கமாட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் முதல்வரை சந்தித்து முறையிடுவது.
நடிகையை அவமானப்படுத்தி செய்தி வெளியிட்டதற்காக நடிகர்சங்கம் போராடுவதுதான் நமக்கு நெருடலாக இருக்கிறது. தமிழாசிரியர்களை இவர்கள் அவமானப்படுத்திய படங்கள் எத்தனை எத்தனை ?. கேரளப் பெண்களை ஒரு படத்திலேனும் இவர்கள் நாகரீகமாக காட்டியதுண்டா ? நடிகர்களைப்பற்றியோ தயாரிப்பாளர்களைப்பற்றியோ புகார் சொன்ன நடிகைகளின் குற்றச்சாட்டுக்களுக்கு இவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன ? தினமலர் ரமேஷை அக்கா தங்கையோடுதான் பிறந்தாயா என கேட்கும் ஸ்ரீபிரியா, பதின்வயது சிறுமிகளைக்கூட முத்தக்காட்சிகளில் நடிக்கவைக்கும் தன் சக ‘ கலைஞர்களை’ நோக்கி இந்த கேள்வியை எழுப்பியிருப்பாரா?
பஸ்டாண்டில் விபச்சாரத்திற்கு ஆள் பிடிப்பவன் புரோக்கர் என்றால், நடிகைகளின் அவயங்களை காட்டி படத்தை விற்கும் இவர்களை எப்படி அழைப்பது ? இவர்கள் எடுக்கும் நெருக்கமான காட்சிகள் ஒன்று நடிகையின் ஒப்புதல் பெற்ற பாலியல் அத்துமீறலாக இருக்கும் அல்லது நடிகையை கட்டாயப்படுத்தி செய்யப்படும் பாலியல் அத்துமீறலாக இருக்கும். இதைப்பற்றி கொஞ்சமும் வெட்கப்படாமல் கதைக்கு தேவையான கிளாமர் இருப்பதாக சொல்லும் இந்த மாமா கூட்டம் நடிகைகளின் மான அவமானத்தைப்பற்றி கவலைப்பட தகுதியுடையதுதானா ?. இவர்களுக்கும் புவனேஸ்வரிக்கும் என்ன வேறுபாடு?, இவர்கள் சொல்லும் நியாயத்தை அவரும் சொல்லக்கூடும், ஏனெனில் அவரும் விரும்பி வருவோரைத்தான் தொழிலுக்கு அனுப்புகிறார். அல்லது கஸ்டமர் கேட்பதை தருவதாககூட ஒரு நியாத்தை சொல்லலாம், ரசிகன் விரும்புவதைத்தான் படமாக எடுக்கிறோமென இயக்குனர்கள் சொல்வதைப்போல.
மற்றொருபுறம் பத்திரிகையாளர்கள் தங்களை ஒரு குடும்பம் என கூறிக்கொள்வதை தவறாக புரிந்துகொண்ட கலாநிதி மாறன் தனது தினசரியில் நடிகர்களின் கூட்டத்தை முழுப்பக்க செய்தியாக போடுகிறார், பின்னே அவர் குடும்ப சண்டையில் இப்படித்தானே நடந்துகொண்டார் ???. பொதுவாக பத்திரிக்கைத்துறையையே நடிகர்கள் திட்டியதால் இவர்கள் ஒன்று கூடினார்கள், நடிகர் சங்கம் தினமலரை மட்டும் திட்டியிருந்தால் இந்த ஒற்றுமையும் இருந்திருக்காது, ஜெயா ஆட்சியில் நக்கீரன் கோபாலை கைவிட்டதுபோல இப்போதும் நடந்துகொண்டிருப்பார்கள்.( கோபால் கைதை எதிர்த்து நடந்த கூட்டத்தின் புகைப்படத்தில் ராமின் படத்தை ஜாக்கிரதையாக தவிர்த்த ஹிண்டுவின் வீரம் அவ்வளவு சீக்கிரம் மறக்கக்கூடியதா என்ன ?? )
இரண்டு தரப்பும் ஒரு விசயத்தில் கவனமாக இருக்கிறார்கள். தங்கள் வசமுள்ள எதிர்தரப்பின் தவறுகள் பற்றிய தகவல்களை இருவருமே வெளியிடவில்லை. அதனால்தான் வெறும் வசவுகளோடும் வாய்சவாடல்களோடும் நிறுத்திக்கொள்கிறார்கள். ஏனெனில் ஆபாசம் இருவருக்குமே பொதுவான ஒரு மூலதனம், அதில் கைவைக்க இரண்டு வியாபாரிகளும் விரும்பமாட்டார்கள்.
நடிகைகள் தங்களை விபச்சாரிகள் என சொன்ன பத்திரிக்கைக்கு எதிராக போராடுவது கிடக்கட்டும்.. தங்களை விபச்சாரிகளை விட கேவலமாக நடத்தும் ( அல்லது திரையில் அப்படிக்காட்டும் ) திரையுலகிற்கு எதிராக முதலில்தமழக மக்களது சமூக அறிவுத் தரத்தை குமுதம் பத்திரிகை நிர்ணயிக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. தற்போது இந்தப் பணியினை தமிழ் சேனல்கள் செய்து வருகிறது என்றாலும் இவையும் குமுதத்தின் பாணியினையே பின்பற்றி செயல்படுகின்றன. அரசியலோ, சமூக அக்கறையோ எதுவாக இருந்தாலும் ஒரு மலிவான கிசு கிசு ஆர்வம் போல மாற்றித தரும் குமுதம் மக்களின் நேர்மறை மதிப்பீடுகளை அழிக்கும் ஒரு வைரஸ். அதைப் பற்றி ஆய்வு செய்யும் புதிய கலாச்சாரக் கட்டுரையை இங்கே பதிவு செய்கிறோம். இந்தக் கட்டுரை வெளிவந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது, வாசகர்கள் எண்ணிக்கை, விலை, பக்கங்கள், விற்பனை விவரம்….. முதலியன இன்று மாறியிருக்கிறது, ஆனால் குமுதம் வழங்கும் சிட்டுக்குருவி லேகியத்தில் எந்த மாற்றமும் இல்லை.குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு !
“குமுதம் பத்திரிகை குறைவான விலையில் அதிகமான பக்கங்களை வெளியிடும்போது, உங்க பத்திரிகை குறைவான பக்கங்களை சற்று அதிக விலையில் விற்பது சரியா?” என்ற கேள்வியை புதிய கலாச்சாரம் பேருந்து விற்பனையின் போது தோழர்கள் அவ்வப்போது சந்திக்க நேரிடும். குமுதத்தின் மலிவு விலை இரகசியம் என்ன?
ஏற்கனவே குண்டுப் பத்திரிகையான குமுதம் தற்போது பெருங்குண்டு பத்திரிகையாக மாறியிருக்கிறது. தனது ‘சைஸ்’ பெருத்ததையே காலத்திற்கேற்ப மாறிக் கொள்வதாய் கூறும் குமுதம், தனது லேட்டஸ்ட் கொள்கைப் பிரகடனத்தைக் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறது.
“குமுதம் இனி ஒரு சிலருக்கு மட்டுமல்ல, எல்லொருக்காகவும் வெளிவரும். சமீபத்திய நேஷனல் ரீடர்ஷிப் சர்வேயின்படி குமுதம் படிக்கும் வாசகர்கள் 50 லட்சம். இந்தியாவின் முதல் 10 பத்திரிகைகளில் இடம் பிடித்திருக்கும் ஒரே தமிழ்ப் பத்திரிகை குமுதம் மட்டும்தான்”.
“இந்தச் சாதனையின் அடிப்படை வாசகர்களாகிய உங்களின் ஆதரவுதான். அந்த ஆதரவு எங்களை நெகிழச் செய்து, நன்றியுடன் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. இனி, 160 பக்கங்களோடு குமுதம் வெளிவரும். ஒவ்வொரு பக்கமும் புதிதாக இழைத்து, உழைத்து, கவனித்துச் செதுக்கப்படும். விலையையும் அதிகப்படுத்தியிருக்கிறோம். இம்மாற்றம் ஒரு ஆரம்பம்தான். தொடரனும் உங்கள் ஆதரவுதான்.
- அன்புடன் ஆசிரியர்.
ஹிந்து பேப்பர், ஃபில்டர் காபி, பிரஷர் குக்கர், கேஸ் அடுப்பு போன்ற நடுத்தர வர்க்க பட்டியலில் குமுதமும் உண்டு. இரண்டு தலைமுறையாக, படித்த தமிழர்களின் குடும்ப உறுப்பினராக குமுதம் மாறிவிட்டது.
குமுதம் மட்டுமே தனது தோற்றத்திலிருந்து இன்று வரை தனது ஃபார்முலாவை மாற்றாமல் தொடர்கிறது. பழைய கள்ளை பானையிலிருந்து, பாலிதீன் பைக்கு மாற்றியதுதான் குமுதம் காலத்திற்கேற்ப மாறுகிறது என்பதின் பொருள். குமுதம் தனது 50 லட்சம் வாசகர்களுக்காக நன்றியுடன் கடினமாக உழைப்பது என்பதின் பொருள் அந்த ஃபார்முலாவைக் காப்பாற்றுவதுதான். அதைப் புரிந்து கொள்ளும்போது குமுதத்தின் 160 பக்கங்களும் கை நிறையக் கிடைக்கும் கழுதை விட்டைகளே என்பது தெரியவரும்.
ஆசிரியர் குழு
ஏனைய செட்டிக் குடும்பங்கள் வட்டி, மளிகை, வியாபாரம் செய்து வந்த போது, 1943 ஆம் ஆண்டு குமுதத்தைத் துவக்கினார் எஸ்.ஏ.பி. செட்டியார். பகவத் கீதையை அடிக்கோடிட்டு படித்து ரசிக்கும் ஆன்மீகவாதியான செட்டியார், நடிகைகளின் அங்கங்களை ஒப்பிட்டு ரசிக்கும் லவுகீகவாதியாகவும் இருந்தார். இவரது பக்தி + செக்ஸ் கலந்த சிட்டுக் குருவி லேகியம்தான் இன்று வரையிலும் குமுதத்தின் இளமையைக் காற்றாற்றுகிறது. கைலாயம் சென்று விட்ட செட்டியாருக்கு லேகியத் தயாரிப்பில் உதவி செய்தவர்கள் ஜ.ரா.சுந்தரேசன், ரா.கி.ரங்கராஜன் ஆகியோர்.
செட்டியாருடன் பங்குதாரராகச் சேர்ந்த பார்த்தசாரதி ஐயங்கார்தான் குமுதத்தின் பதிப்பாளர். நெற்றியில் நாமமிடும் தீவிர வைஷ்ணவாளாக இருந்தாலும், துட்டு விசயத்தில் இவரிடம் யாரும் நாமம் போட முடியாத அளவுக்கு கறாரான வியாபாரப் பேர்வழி. 90களின் தமிங்கல யுகத்திற்கேற்ப குமுதத்தை மாற்றியவர்களில் சுஜாதாவும், மாலனும் முக்கியமானவர்கள். ‘என்னால்தான் சர்குலேஷன் உயர்ந்தது’ என்று குமுதத்தின் பங்குதாரர்களாக மாற விரும்பியதால் இந்த முன்னாள் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டார்கள். வெளியாட்களை ஆசிரியராகப் போட்டால்தானே இந்தத் தொல்லை என அமெரிக்காவில் மருத்துவத் தொழில் புரியும் செட்டியாரின் மகன் ஜவகர் பழனியப்பனையே ஆசிரியராக்கியிருக்கிறார்கள்.
குமுதத்தின் ஆசிரியர் குழுவினர் வார இறுதியில் உட்லண்ட்ஸ் ஓட்டலில் டிபன் சாப்பிட்டு மாலையில் மெரினாக் கடற்கரையில் அமர்ந்து அடுத்த வார இதழின் செய்திகளை விவதிப்பார்களாம். கடந்த 53 ஆண்டுகளாக வெளிவந்த 2809 குமுதக் குட்டிகளைப் பெற்றெடுத்த பாவம் மெரினாக் கடற்கரையையே சாரும்! ஆயினும் இதே அரட்டையைத்தான் கிராமத்தின் பணக்காரப் பண்ணைப் பெரிசுகள், திண்ணையில் தொந்தி புரள, வாயில் குதப்பிய வெற்றிலையுடன், ‘அடுத்தாத்து அம்புஜத்தை கவனிச்சேளா ஓய்’ என்று பல நூற்றாண்டுகளாய்ச் செய்து வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இலாபமே துணை
வாரம் 5 லட்சம் பிரதிகள் என ஆண்டுக்கு 265 இலட்சம் குமுதங்கள் விற்பனையாகின்றன. குமுதத்தின் விலையான 5 ரூபாயில், அதன் அனைத்து விதமான செலவுகளையும் கணக்கிட்டால் அடக்க விலை அதிக பட்சமாக ரூ.3.50 வரும். எனில் ஒரு இதழின் லாபம் 1.50. ஆண்டுக்கு 3 கோடியே 97 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய். குமுதத்தின் ஓரிதழில் 30 பக்கங்கள் விளம்பரத்திற்காக ஒதுக்கப்படும். அட்டை, வண்ணம், சிறப்பு என எல்லா விளம்பரங்களையும் கணக்கிட்டால் ஒரு பக்கத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் வரலாம். இவ்வகையில் வருடத்திற்கு 11 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என சிறப்பிதழ்களின் கூடுதல் வருமானத்தை சேர்த்தால் மொத்த ஆண்டு வருமானம் 20 கோடியைத் தாண்டும். ரிப்போர்ட்டர், மாலைமதி, பக்தி ஸ்பெஷல் போன்ற குமுதம் குடும்ப பத்திரிகைகளின் வருமானம் தனி.
குமுதத்தின் இட ஒதுக்கீடு
விளம்பரங்கள் போக உள்ள 130 பக்கங்களில் சராசரியான இட ஒதுக்கீடு தலைப்பு வாரியாக பின் வருமாறு. சமூகம் – 5, அரசியல் – 15, சினிமா – 19, தொலைக்காட்சி -5, இசை -1.5, விளையாட்டு – 2, மருத்துவம் – 5, வாசகர் கடிதம் – 2, உலகச் செய்தி – 2, ஜோக் – 3, சிறுகதைகள் – 9, ஒரு பக்க கதைகள் – 4, புதிர் போட்டி – 2, தொடர் கதைகள் – 15, உணவு – 2, சுற்றுலா – 4, பேஷன் – 4, வேலை, கல்வி – 3, கவிதை – 2, வியாபாரம் சுய முன்னேற்றம் – 5, நூல் அறிமுகம் – 1, பக்தி ஆன்மீகம் – 5, அரசு கேள்வி பதில் – 2, இதரவை – 12.5 என ஒதுக்கப்படுகிறது. குமுதல் ஒரு ஃபேன்ஸி ஸ்டோரின் மினுமினுப்பைக் கொண்டிருக்கும். இத்தனை சமாச்சாரங்கள் இருந்தாலும் அத்தனையிலும் குமுத்தின் லேகியம் கலந்திருக்கும்.
இட ஒதுக்கீட்டில் எழுத்து ஒதுக்கீடு
படங்கள் இல்லாமல் குமுதத்தின் ஒரு பக்கத்தில் 200 வார்த்தைகள் இடம் பெறும். குமுதத்தின் எல்லாக் கட்டுரைகளிலும் செய்தி போன்ற அரட்டை, ரசனை நடை, கிசுகிசு நடை, புகைப்படம், ஓவியம், வடிவமைப்பு இடம் ஆகியவை இடம் பெறும். குமுதத்தின் கதைகளுக்குரிய 30 பக்கங்களை கழித்து மீதியுள்ள 100 பக்கங்களைப் பிரித்துப் பார்ததால்,
செய்தி, அரட்டை = 40 பக்கங்கள், படங்கள் = 36 பக்கங்கள், கிசு கிசு நடை = 23 பக்கங்கள் என வரும். இதில் வாசகர்கள் ஓரளவிற்கேனும் துளியூண்டாவது செய்திகளைத் தெரிந்து கொள்வது 40 பக்கத்தில் மட்டும்தான். அதாவது 8000 வார்த்தைகள். இதைப் புதிய கலாச்சாரத்தின் வார்த்தை – பக்க அளவிற்கு மாற்றினால் 13 பக்கங்கள் வரும்.
இந்த 13 பக்க செய்திகளைத் தேர்வு செய்து, கண்டு, கேட்டு, படித்து, சுட்டு, மொழிமாற்றி, இன்னும் மூளையை கசக்கி எழுதினாலும் – ஒருமனித மூளை உழைக்க வேண்டியது அதிக பட்சம் 24 மணிநேரம் மட்டும்தான். இதையே கிசுகிசு – லேகியம் கலந்து ஊதிப்பெருக்கி எழுத கூடுதலாக ஒரு 24 மணிநேரம் வேண்டும். ஆனால் இதற்காகவே புரசைவாக்கத்தில் ஒரு மாளிகையைக் கட்டி, எல்லா நவீன வசதிகளையும் ஏற்படுத்தி, ஒரு பெரும்கூட்டமே வேலை செய்கிறது என்றால் தமிழன் செய்த பாவம்தான் என்ன?
புகைப்படங்கள்
குமுதத்தின் கதைகளில் இடம்பெறும் ஓவியங்களைக் கழித்துப் பார்த்தால் சுமார் 35 பக்கங்களை நிரப்பும் அளவுக்கு புகைப்படங்கள் வருகின்றன. இதில் சினிமா மனிதர்கள் – கவர்ச்சிப் படங்கள் 15 பக்கம், பிரபல அரசியல் தலைவர்களின் விதவிதமான கோணங்கள் 6 பக்கம், ஊருக்கு உபதேசம் செய்யும் தமிழக சமூகப் பிரபலங்கள் 6 பக்கம், இயற்கைக் காட்சிகள் 4 பக்கம், பொது மக்கள் 3 பக்கம் எனவும் இடம் பெறுகின்றனர். அதிலும் பொது மக்கள் ஸ்டாம்ப் சைசில் கறுப்பு-வெள்ளையில் தோன்றுவார்கள். சினிமாத்தோல் மட்டும் பளபளப்பு காகிதத்தில் பல வண்ணத்தில் முழு- அரை- கால் பக்க அளவுகளில் இடம்பெறும்.
ஒரு கட்டுரையின் மையமான விசயத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில்தான் புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வடிவமைப்பு போன்றவை இடம் பெறும். ஆனால் குமுதத்தின் குறிப்பிட்ட கட்டுரைக்குள் நுழைவதற்கு ஆசை காட்டி அழைப்பதற்கே இவை பயன்படுகின்றன. இன்னும் பளிச்சென்று புரிய வேண்டுமானால் தரங்குறைந்த மேக்கப்புடன் தெருவோரத்தில் நிற்கும் விலைமாது ‘வாரியா’ என்றழைப்பதைத்தான் குமுதத்தின் புகைப்படங்களும் உணர்த்துகின்றன.
மேலும் சினிமா, பெண், மேட்டுக்குடி வாழ்க்கை, பேஷன் ஆகியவற்றின் புகைப்படங்கள் ஏற்படுத்தும் அழகு பற்றிய படிமங்கள், குமுதத்திற்கு பிரியாணி போடும் விளம்பங்களுக்கு தேவையான ஒன்றாகவும் இருக்கிறது.
விளம்பரங்கள்
‘பெண்களின் கனவு! எல்லா வயதிலும் பெண்களின் கனவு! ஆரோக்கியம்! கட்டுடல்! அழகு! – மெடிமிக்சின் சுந்தரி கேப்சூல் விளம்பரத்தின் வாசகம். குமுதம் உருவாக்க விரும்பும் மனிதர்களின் சாரத்தை ஒரு கவிதை போல 30 பக்க விளம்பரங்களும் தெரிவிக்கின்றன. நுகர்பொருள் நடுத்தர வர்க்கத்தையும் குறிப்பாக பெண்களையும் குறி வைத்து ஏவப்படும் இந்த விளம்பரங்கள் குமுதத்தின் சாரத்தை எளிமையாக புரியவைக்கும். பற்பசை, சோப், தேநீர், ஊறுகாய், காஃபி, பட்டு, பாத்திரங்கள், ஆன்மீகம், அனாதை இல்லம், ஆணுறை, உடலுறவு மாத்திரைகள், பைனான்ஸ், எல்.ஐ.சி. பாலிசி, கம்ப்யூட்டர் கல்வி, கருவளையம், ப்ரா, கூந்தல் தைலம், உடல் மெலிவு மாத்திரைகள், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், கூப்பன் காட்டினால் தள்ளுபடி, மெகா பரிசுப் போட்டி என்று நிலைக்கண்ணாடி முன், தன்னையும், தன் வாழ்க்கையையும் பார்க்க, ரசிக்க, அடைய வாசகர்களை பெண்களைப் பயிற்றுவிக்கின்றன.
குமுதவியல்
குமுதம் முதலாளிகள் உருவாக்கியிருக்கும் குமுதவியல் என்ற இரசனைதான் அவர்கள் கட்டிக்காத்து வரும் ஓரே சொத்து. அரசியல், ஆன்மீகம் தொடங்கி, செக்ஸ், சினிமா வரை ஆட்சி செய்யும் அந்த இரசனை, மூளையின் சிந்தனை நரம்புகளை மக்கிப் போகவைக்கிறது.
குமுதத்தின் அட்டையில் 80 சதவீதம் திரைப்பட நடிகைகள் கவர்ச்சியுடன் இடம் பெறுவர். அந்தக் கவர்ச்சியின் பின்னணியில் அரசியல் – சமூகக் கட்டுரைகளின் தலைப்பு பளிச்சென்று தெரியும். வெள்ளை பனியன் அணிந்த சிம்ரனின் இடையில் ஃப்ளோரசன்ட் ஆரஞ்சு வண்ணத்தில் தீண்டாமைக் கிராமங்கள் என்றொரு அட்டை சமீபத்தில் வெளிவந்தது. தீண்டாமைக் கட்டுரைக்கு தாழ்த்தப்பட்ட மக்களையோ, சேரிகளையோ போடுவதற்குப் பதில் சிம்ரனைப் போட்டிருப்பது ஆத்திரமாக அருவருப்பாக இல்லையா? அடுத்த வாரத்தின் வாசகர் கடிதத்தில் “சினிமாவில் கூட சிம்ரன் இத்தனை அழகாக இல்லை” என்று ஒருவர் எழுதுகிறார். இதுதான் குமுதவியலின் சாதனை.
எழுத்தில் குமுதம் செய்வதை காட்சியாக 24 மணிநேரமும் சன்.டி.வி செய்கிறது. அதனால் ஓரளவு முற்போக்கு – அரசியல் ஆர்வலர்களின் வட்டத்தை இழுப்பதற்கு கரூரில் தாலி கட்டிய சிறுமிகள், மதுரையில் விபச்சாரம் செய்யும் சிறுமிகள், வீட்டை விட்டு ஓடிவரும் சிறுவர்கள், மேலவளவு தீண்டாமை போன்ற செய்திகளை குமுதம் வெளியிடுகிறது. இந்தத் தூண்டிலில் சிக்கும் புதியவர்கள் ஏனைய பக்கங்களையும் படிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். குமுதத்தின் ஆன்மீகம், வேலை வாய்ப்பு, கல்விப் பயிற்சி, உடல்நலம் போன்ற பிரிவுகளுக்கும் இது பொருந்தும். தத்தமது நோக்கத்திற்காக குமுதத்தை திறப்பவர்கள், மூடும்போது மூளை மரத்த பிண்டங்களாக மாற்றப்படுவதுதான் குமுதவியலின் மகிமை.
அரசியலையும், சமூகவியலையும் உருவிவிட்டு தலைவர்களது பழக்கவழக்கங்கள், உறவுகள், மோதல்கள் போன்றவற்றைத் தருவதுதான் குமுதத்தின் அரசியல் கட்டுரைகள். “வைரமுத்துவுடன் திடீரென்று மாமல்லபுரம் செல்கிறார் கலைஞர். ரஜினி, கமல், அண்ணா, பெரியார் பற்றி விவாதிக்கும் கலைஞர், பொறித்த மீனை வைரமுத்துவுக்குப் போடச் சொல்லும் கலைஞர், வீட்டு நாயை சமாதானப்படுத்துமாறு செல்போனில் அழைக்கும் தயாளு அம்மாளுடன் பேசும் கலைஞர் – இலையே கலைஞரின் மாமல்லபுரம் விசிட் பற்றிய 4 பக்கக் கட்டுரைச் செய்திகள்.
இப்படி தலைவர்களது சேட்டைகள், பேட்டிகள், சவுடால்கள், சந்தர்ப்பவாதங்கள் அனைத்தையும் மறக்கச் செய்து அவர்கள் பல் தேய்த்து – பழம் தின்ற கதைகளை ரசனையுடன் வெளியிடுவதில் குமுதம் ஒரு முன்னோடி.
காந்தி ஜயந்தியை நினைவு கூறும் குமுதம், பொள்ளாச்சி பூச்சி மருந்து வியாபாரி ஒருவர் காந்தி தபால் தலைகளைச் சேகரித்திருப்பதை தெரிவிக்கிறது. பொங்கல் சிறப்பிதழ் ஒன்றில், தமிழே தெரியாத பம்பாய் நடிகை பொங்கலிடுவதையும், கோலமிடுவதையும், பொங்கல் பற்றிய அவரது தத்துவங்களையும் வெளியிடுகிறது. காதல் சிறப்பிதழ் ஒன்றில், சேலம் அருகே உள்ள கிராமத்தினர், ஓடிப்போகும் காதலர்களை மீட்டு வந்து சுடுகாட்டில் தாலிகட்ட வைப்பதாக ஒரு செய்தி. இங்கே காந்தியும், காதலும், பொங்கலும் கீழான ரசனையில் ஜொலிப்பதுதான் குமுதவியலின் புதுமை.
முன்அட்டை முதல் பின் அட்டை வரை எல்லா பக்கங்களிலும் சினிமா விரவியிருக்கும். நடுத்தர வர்க்கத்து பெண்மணிகள் சமைத்து ஓய்ந்த நேரங்களில் பேசிக் கொள்ளும் ஒரே சமூக விசயம் குமுதத்தின் சினிமா செய்திகள்தான். அரசியல் தலைவர்களை விட சினிமா நாயகிகளின் பழக்க வழக்கங்கள் நுணுக்கமாகப் பதியப்படும். சினிமாக் குமுதம்தான் வாசகர்களின் ரசனை, படிப்பு, கண்ணோட்டம் அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறது.
மோனிகா லிவின்ஸ்கி குண்டான செய்தியும், டென்னிஸ் நட்சத்திரங்கள் அகாஸி – ஸ்டெபிகிராப் காதல் படங்களும் அயல்நாட்டு செய்திகளாய் அணி வகுக்கும். ‘குடும்ப விழாவில் உங்களை ரகசியமாக பெண் பார்க்கும் போதும்’, விருந்திற்கு வந்த இளைஞர் கூட்டம் உங்கள் மார்பிலிருந்து கண்ணை அகற்றாமல் இருப்பதற்கும் போட வேண்டிய உடைகள், அழகுக் குறிப்புகள் ‘பேஷன் வாட்ச் பகுதியில் இடம் பெறும். இவையெல்லாம் விபச்சாரத்திற்கான வழிமுறைகள் என்பது படிக்கும் பெண்களுக்கு தோன்றாது.
பக்திக் கட்டுரையில் தஞ்சாவூர்க் கோவில்களின் புராண புரட்டுக் கதைகள் குமுதவியலின் திரைக்கதை வடிவில் வெளிவரும். சென்று வரும் செலவு, பாவ – பரிகார பட்டியல், கதை சொல்லும் நீதி, குறிப்பிட்ட கடவுள் எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பார் என்று குறிப்பும் உண்டு. ‘இந்து’ உணர்வை எழுப்பப் போராடும் இந்து முன்னணி கூட இவ்விசயத்தில் குமுதத்திடம் பிச்சை எடுக்க வேண்டும்.
பக்திக்குப் பிறகு வியாபாரம், சுய முன்னேற்றம், இரண்டரை லட்சம் முதல் போட்டு 73,000 கோடியில் நிற்கும் திருபாய் அம்பானியின் கதை ஆங்கிலப் படத்தின் டிரெய்லர் போல வரும். மோசடியால் முன்னேறிய இத்தகைய ‘பிசினஸ் மகாராஜாக்கள்’ குமுதத்தில் கைபட்டு உழைப்பால் உயர்ந்த உத்தமர்களாக காட்சியளிப்பார்கள்.
பாலுறுவு இச்சையைத் தூண்டிவிட்டு வேறு ஒன்றில் முடியும் 1 பக்க கதைகள், கள்ள உறவு தத்துவப் புகழ் பாலகுமாரன் போன்றோரின் தொடர்கதைகள் போன்றவை குமுதவியலின் கதை இலாகாவில் தவறாமல் இடம் பெறும்.
இப்படித்தான் குமுதத்தின் ஒவ்வொரு பக்கமும் உழைத்து, இழைத்து , செதுக்கி உருவாக்கப்படுகிறது. சர்ரியலிசம், மாஜிகல் ரியலிசம், போஸ்ட் மாடர்னிசம் போன்ற, சிறு பத்திரிகைகள் மண்டை பிளக்க விவாதிக்கும் இசங்களின் நடைமுறை உதாரணம் குமுதம் மட்டும்தான். வாழ்க்கையை விளையாட்டாக, வேடிக்கையாக, ரசனையாகப் பார்க்க வைக்கும் குமுதவியல், வாழ்க்கையைத் தீவிரமாகப் பார்க்க விடாமலும் வினையாற்றுகிறது. நினைவில் நிற்காத குமுதத்தின் பக்கங்கள், நினைவில் நிறுத்த வேண்டிய பிரச்சினைகளை மறப்பதற்கும் கற்றுக் கொடுக்கிறது. குமுதத்தின் நொறுக்குத் தீனி ரசனை, வாழ்க்கை பற்றிய சமூக மதிப்பீடுகளை நொறுக்குகிறது.
தமிழ் சினிமாவிற்கு முன்பு விதிக்கப்பட்ட கேளிக்கை வரி குமுதத்திற்கு கிடையாது. குமுதத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் தபால் இரயில் சலுகைக் கட்டணங்களின் மதிப்பு பல கோடியிருக்கும். பொதுத் துறைகள் நட்டமடைய குமுதமும் ஒரு காரணம் என்பதை தொழிலாளிகள் உணர வேண்டும். மரங்களை வெட்டிக் கூழாக்கித்தான் செய்திக்காகிதம் தயாரிக்கப்படுகிறது. ஒரு வருட குமுதத்திற்கு தேவைப்படும் காகிதம் பல லட்சம் மெட்ரிக் டன்னாகும். குமுதத்திற்காக உலகெங்கும் லட்சக்கணக்கான மரங்கள் ஆண்டு தோறும் அழிக்கப்படுகின்றன.
குமுதத்திடமிருந்து காட்டின் இயற்கை வளத்தையும், நாட்டின் சிந்தனை
மேகங்கள் திட்டு திட்டாய் .எக்மோர் ரயில் ஸ்டேஷனிற்குள் நுழைந்தேன் . பின்னாலே என் மனைவியும் கை குழந்தையும் அவளால் இழுத்து வரப்படும் பிரீப்கேசும் .என் கைகள் பான்ட் பாக்கெட்டிற்குள் நுழைத்தபடி வாயில் சூயிங்கம்மை மென்றபடி நடந்தேன் .என் பெயர் சுருக்கமாக முகுந்த் . முழு பெயர் வேண்டாம் அதை சொல்வதற்குள் நான் போகும் ட்ரைன் சென்றுவிடும் .சரியாக 5 : 25 மணிக்குள் ஐந்தாவுது பிளாட் பாரத்தில்இருந்து கிளம்பும் காச்சிகூடா எக்ஸ்பிரஸ்யை புடிக்க வேண்டும் .ஏனென்றால் நான் ஹைதராபாத் போக வேண்டும்
என் வாட்சை பார்த்தேன் 5 மணி காட்டியது . நான் ரயில்வே ட்ராக்கை கடந்து செல்லும் படியில் ஏறி மேலிருந்து பார்த்தேன் .என் மனைவி சேலைத்தலைப்பு தடுக்க குழந்தையுடன் கஷ்டப்பட்டு ப்ரீப்கேசுடன் போராடி கொண்டிருந்தாள்
நான் மேலிருந்து கூவினேன் . ம்ம் சீக்கிரம் வா .என் மனைவி பெயர் சுகந்தி. சரியாக மூன்று வருடம் ஆகிவிட்டது அவளை திருமணம் செய்து .குழந்தை பிறப்பதற்கு முன் அழகாத்தான் இருந்தாள் . குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் கொஞ்சம் கண்ணுக்கு கீழ் கருவளையம் கொஞ்சம் மேடிட்ட வயிறு .முன்பெல்லாம் இரு சிங்கிளாக இருந்தது இப்பொழுது ஒரு சிங்கிள் ஆகிவிட்டது .நான் எதற்கு ஹைதரபாத் செல்கிறேன் என்றால் .அங்கேதான் எனக்கு பணி . இநதியா முழுவதும் கிளைகள் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஹைதராபாத் கிளையில் மேனேஜராக பணிபுரிகிறேன் .லீவிற்கு சொந்த ஊருக்கு சென்றுவிட்டு பணிக்கு திரும்பி கொண்டிருக்கிறேன் .
நான் ஏற வேண்டிய கம்பார்ட்மென்ட் வந்தது .அதில் ஏறி முதலில் என் குழந்தையை வாங்கினேன்.உள்ளே சென்றோம் .நான் ஜன்னல் ஓரமாக அமர்ந்தேன் என் அருகில் என் குழந்தையை படுக்க வைத்தாள் என் மனைவி . எதிர் இருக்கையை காலியாக இருந்தது
" புக் எதுவும் வாங்கனுமா " என்றேன்
" சரி வாங்கிட்டு வாங்க " என்றாள்
கீழிறங்கி சென்றேன் .புத்தக கடைக்கு சென்று ஆனந்த விகடன் , குமுதம் வாங்கினேன்
ரயில் ஏறி எனது இருக்கைக்கு முன்னேறினேன் . இருக்கையில் அமர்ந்து என் மனைவியிடம் புத்தகங்கள் குடுக்கும் போது எதிரில் பார்த்தேன் .அப்படியே என் கையில் இருந்த புத்தகம் நழுவி இருக்கையில் விழுந்தது
------------------------------------------------------------------------------------------------------------------------------------
தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
அவளுக்கு மிஞ்சி போனால் 25 வயது இருக்க முடியும் .ரோஸ் கலரில் மெலிய ஷிபான் சேலையும் அதற்கு மேச்சாக பிங்க் கலரில் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள் .அவள் குனிந்தபோது பிரா பட்டைகள் விலகி தெரிந்தது .அதுவும் ரோஸ் கலர் .ஆஹா .
அப்போது விநோதமான ஒரு ஒலி கேட்டது .அந்த ஒலி அவள் அருகினில் இருந்துதான் வந்தது .வந்த திசையை நோக்கினேன் .ஒரு மனிதன் அமர்ந்திருந்தான் .கொட்டாவி விட்டிருக்கிறான் .ச்சை. முகத்தில் இரண்டு நாள் தாடி ஒரு சோட பட்டி கண்ணாடி .அழகை ரசித்து கொண்டிருக்கும் பொழுதுதான் இடைஞ்சல் தருவார்கள் .அவளைவர்ணித்து கொண்டிருந்ததை நிறுத்தி விட்டேன் அல்லவா தொடர்கிறேன் . இவள் பிறந்த ஆண்டு படைப்பு கடவுள் பிரம்மனின் பவள விழா படைப்பாக இவள் இருக்கவேண்டும் . ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள் .நெற்றியில் மெல்லிய புடைப்பு அதில் செதுக்கி விட்டாற்போல் இரு புருவங்கள் .அதற்கு கீழ் இரு பள்ளங்கள் அந்த பள்ளத்தில் இரு முத்துக்கள் அதற்கு பெயர் கண்கள் .
" என்னங்க " சடாரென்று திரும்பி முறைத்தேன் என்ன என்பது போல் " குழந்தை ஆய் போய்ட்டான்க கொஞ்சம் சூட் கேசில் இருந்து துணி எடுத்து குடுங்க தொடைக்கணும்" எடுத்து குடுத்தேன்
எதிரில் அமர்ந்திருந்த மனிதன் எழுந்தான்.அவள் இதழ்கள் பிரிந்து " எக்கடக்கி " என்றது . ஓ தெலுங்கா அதற்கு அவன் சிறு குழந்தை போல் ஆள்காட்டி விரலை நீட்டி மற்ற விரல்களை மடக்கி காட்டினான் .அவனை அசூசையாக பார்த்தேன் . அவளை மீண்டும் சுவைக்க ஆரம்பித்தேன் அப்பொழுதான் என்னை பார்த்தாள் . முறைப்பா அல்லது வரவேற்ப்பா என்று தெரியாத ஒரு விழி வருடல் அளித்தாள்.
ஜன்னல் ஓரம் திரும்பினேன் .ரயில் ரேனிகுன்டாவை நெருங்கி விட்டதாக காட்டியது .இவளை ரசித்து வந்ததில் நேரம் போனதே தெரியவில்லையே . என் மனைவியிடம் திரும்பி " இந்த ஸ்டேஷன் லே ஏதாவுது சாப்பிட வாங்கிவிடலாம் "என்றேன் .தலையாட்டினாள் . .அந்த மனிதன் வந்தான் .அமர்ந்தான் நெட் உயிர்த்தான்
அவளிடம் திரும்பி " நீ மிடில் பெர்த்தில் படுத்துகொள் நான் அப்பர் பெர்த்தில் படுத்து கொள்கிறேன் " என்று தெலுங்கில் உரைத்தான் .நான் என் மனைவியிடம் திரும்பி நீ லோயர் பெர்த்தில் படுத்து கொள் " என்றேன்
நான் அப்பர் பெர்த்தில் படுத்தவாறு குனிந்து பார்த்தேன் .அவள் இன்னும் தூங்க ஆரம்பிக்க வில்லை .போக போக குளுருவதுபோல் போல் இருந்தது .ஐயையோ காற்றே நீ மட்டும் வீசு ஆனால் குளுரச்செய்யாதே ஒரு வேளை அவள் போர்த்தி கொள்ளலாம் .மானசீகமா காற்றிடம் இறைஞ்சினேன் .அவளது கண் முடி இருந்தது " ஏங்க லைட் ஆப் பண்ணவா " என்றாள் என் மனைவி ." வேண்டாம் நான் கொஞ்சம் நேரம் புத்தகம் படித்து வருவேன் " என்று தலைகாணி அடியில் இருந்த புக்கை எடுத்தேன் .அவள் தூங்க ஆரம்பித்து விட்டாள் என்று தெரிந்தது .கையை தலைக்கு பின்னால் வைத்த போது அவளுடைய மாராப்பு மெதுவாக விலகியது .நான் குப்பரடித்து படுத்தேன் .அங்கமெலாம் சூடேறியது . அவள் ஒருக்களித்து படுத்தாள் .தொப்புள் தெரிந்தது .தூக்கத்திலும் பெண்களுக்கு இயல்பாகவே தன் உடை விலகுவது குறித்த உணர்வு இருக்கும் போல .அதை சரிசெய்து கொண்டாள். ச்சை
------------------------------------------------------------------------------------------------------------------------------------
தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
திடீரென்று முழிப்பு வந்தது .மணியை பார்த்தேன் .4:30 .இன்னும் இரண்டரைமணி நேரத்தில் காச்சிகூடா வந்துவிடும் .பாத்ரூம் செல்ல உந்துதல் வந்தது . கீழிறங்கினேன் . என் மனைவியை பார்த்தேன் குழந்தையை அணைத்தவாறு போர்வையை கழுத்துவரை மூடி இருந்தாள் .அவளை பார்த்தேன் அந்த பக்கம் ஒருகளித்தவாறு படுத்திருந்தாள். என் முகத்திற்கு நேரே அவளது முதுகு தெரிந்தது ஆனால் நான் அதை பார்க்கவில்லை வேறொன்றை பார்த்தேன் .
பாத்ரூம் காலியாக இருந்தது. உள்ளடைந்து கதவை சாத்தினேன் .
------------------------------------------------------------------------------------------------------------------------------------
தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
வெளியில் வந்து முகத்தை கழுவினேன் . கண்ணாடியை பார்த்து முடியை கோதினேன் .திரும்பினேன் . எனது இருக்கைக்கு முன்னால் கூட்டமாக இருந்தது . முன்னேறினேன் .கூட்டத்தை விலக்கினேன் . உள்ளே என் மனைவி அழுதவாறு அமர்ந்திருந்தாள் .
-
மணி சரியாக 5 :30 காட்டியது .அந்த பெண்ணை பார்த்தேன் என் குழந்தையை மடியில் வைத்திருந்தாள் . அவள் கூட அமர்ந்திருந்த மனிதன் அவள் கணவன் . எவனோ ஒரு திருடன் வந்து கத்தி யை காட்டி மிரட்டி என் மனைவியின் நகைகளை கேட்டிருக்கிறான் .அப்போது நடந்த சண்டையில் அவள் கணவனின் தோல்பட்டையில் கத்தி குத்து விழுந்திருக்கிறது . பிறகு சத்தம் கேட்டு எல்லோரும் எழுந்தவுடன் அவன் பயந்து போய் ஓடும் ட்ரைனில் இருந்து குதித்து தப்பி ஓடி இருக்கிறான்
அந்த கணவனை ஆழமான கத்தி குத்து இல்லாவிட்டாலும் ரத்த சேதாரம் இருந்தது .அவன் கையை பிடித்து நன்றி கூறினேன்
அதற்கு அவன் தெலுங்கில் " பர்லேது சார் என் சகோதிரியாக இருந்தால் சண்டை போட்டிருக்க மாட்டேனா " என்றான்
" ரயில்வே போலீசில் கம்ப்ளைன் செய்து விடுவோம் " என்றேன்
.ட்ரைன் மெதுவாக சென்று கொண்டிருந்தது .ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பினேன்
சாக்கடை நாற்றம் அடித்தது . அதில் பன்னிகூட்டங்கள் எதையோ போட்டி போட்டு கொண்டு தின்று கொண்டிருந்தது .அதில் ஒரு பன்னி என்னை நிமிர்ந்து பார்த்தது .அந்த பார்வை " உனக்கு நாங்க எவ்வளவோ தேவலாம்டா " என்பது போல் இருந்தது
ரயில் வேகமெடுத்தது
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக்
ங்களும்
சென்ற மாத இதழின் தொடர்ச்சி…
கஃபா குரைஷியரால் புனர் நிர்மானம்
குரைஷியரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய கஃபா வரலாற்றுச் சிறப்புமிக்கதோர் புனர் நிர்மானத்திற்கு உட்படுத்தப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் உனக்குத் தெரியுமா? உனது சமூகத்தவர்கள் (குரைஷியர்) கஃபாவைக் கட்டிய போது பொருளாதார நெருக்கடியால் இப்ராஹீம் (அலை) அவர்களின் அடித்தளைத்தைச் சுருக்கிவிட்டனர், உனது சமுதாயவத்தவர் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த மக்களாக இல்லை என்றால் அதை இடித்துவிட்டு, நான் அதை இப்ராஹீம்(அலை) அவர்களின் சரியான அடித்தளத்தின் மீது கட்டி, ஆறுமுளம் அதிகப்படுத்தி, ஹிஜ்ரையும் கஃபாவினுள் கொண்டு வந்து, அதற்கு கிழக்கு மற்றும், மேற்கு வாசல்களையும் வைத்திருப்பேன் எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
இந்த ஹதீஸ் கஃபா சாதாரண ஒரு உயரத்தில் இருந்து வந்துள்ளதையும், இப்ராஹீம் நபியின் அடித்தளம் சுருக்கப்பட்டு கட்டப்பட்டதற்க பொருளாதாரத நெருக்கடி காரணம் என்பதையும் விளக்குகின்றது. அப்படியானால் அந்தப் பகுதி மக்கள் ‘ஹிஜ்ரு இஸ்மாயீல் என்றழைக்கும் ‘ஹிஜ்ர்’ என்ற அந்த வளைவு மூலை என்பது ஹதீஸ்களில் இருந்து புரிய முடிகிறது. அது பற்றிய செய்தி பின்னர் தரப்படும்.
கஃபா குரைஷியரால் புனர் நிர்மானம்
குரைஷியரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய கஃபா வரலாற்றுச் சிறப்புமிக்கதோர் புனர் நிர்மானத்திற்கு உட்படுத்தப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் உனக்குத் தெரியுமா? உனது சமூகத்தவர்கள் (குரைஷியர்) கஃபாவைக் கட்டிய போது பொருளாதார நெருக்கடியால் இப்ராஹீம் (அலை) அவர்களின் அடித்தளைத்தைச் சுருக்கிவிட்டனர், உனது சமுதாயவத்தவர் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த மக்களாக இல்லை என்றால் அதை இடித்துவிட்டு, நான் அதை இப்ராஹீம்(அலை) அவர்களின் சரியான அடித்தளத்தின் மீது கட்டி, ஆறுமுளம் அதிகப்படுத்தி, ஹிஜ்ரையும் கஃபாவினுள் கொண்டு வந்து, அதற்கு கிழக்கு மற்றும், மேற்கு வாசல்களையும் வைத்திருப்பேன் எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
இந்த ஹதீஸ் கஃபா சாதாரண ஒரு உயரத்தில் இருந்து வந்துள்ளதையும், இப்ராஹீம் நபியின் அடித்தளம் சுருக்கப்பட்டு கட்டப்பட்டதற்க பொருளாதாரத நெருக்கடி காரணம் என்பதையும் விளக்குகின்றது. அப்படியானால் அந்தப் பகுதி மக்கள் ‘ஹிஜ்ரு இஸ்மாயீல் என்றழைக்கும் ‘ஹிஜ்ர்’ என்ற அந்த வளைவு மூலை என்பது ஹதீஸ்களில் இருந்து புரிய முடிகிறது. அது பற்றிய செய்தி பின்னர் தரப்படும்.
மார்க்கத்தை நிலை நாட்டும் பொறுப்பு அல்லாஹ்வினுடையது:
இஸ்லாத்தை இந்த பூமியில் நிலை நாட்டுவதற்கும்; இஸ்லாமிய மார்க்கத்திற்கு வரும் அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் தவிடு பொடியாக்கி மார்க்கத்தை இந்த பூமியில் மேலோங்கச் செய்வதற்கும் உரிய மாபெரும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக்கொண்டுள்ளான். ஆகவே அந்தப்பணிகளுக்கு ஏற்ற, தகுந்த மக்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் தேர்ந்தெடுத்து அனுப்பிக் கொண்டேயிருக் கின்றான்.
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் -முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.
(அல்குர்ஆன்: 9:33)
No comments:
Post a Comment